சிறுகதை

“பட்டபிறகே தெளியும்” – ராஜா செல்லமுத்து

நகரின் பிரதான சாலைக்கு சென்று கொண்டிருந்தான் சந்தானம்.

மிகவும் நெருக்கடியான தெரு என்பதால் இருபுறமும் கடைகள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன

ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற கூட்டம் வலுத்துக் கிடந்தது.

சந்தானம் எந்த பொருளை வாங்குவதற்கும் அந்த தெருவுக்குள் நுழையவில்லை. ஒருவரை பார்ப்பதற்காகத்தான் அந்த தெருவழியாக நடந்து சென்று கொண்டிருந்தான்.

அந்தத் தெருவை விட்டால் இரண்டு மூன்று கிலோமீட்டர் சுத்தி தான் அவன் சந்திக்கும் நபரை பார்க்க முடியும் என்றிருந்தால் அந்த நெடிய ஆள் நெருக்கமான கொடிய தெருவில் சென்று கொண்டிருந்தான்.

அரைக் கிலோ மீட்டர் தூரத்திற்கு இடது புறம் வலது புறம் என்று திரும்பிக் கூட பிரிய முடியாத அளவிற்கு தெருக்கள் நேராக இருந்தன.

நீண்ட நேரமாக சந்தானத்திற்கு இயற்கை உபாதை. அந்த உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்பட்டான்.

எப்படியாவது உபரி நீரை வெளியே தள்ளி விட வேண்டும் என்று அங்குமிங்கும் அலைந்து பார்த்தான். ஒரு இடம் கூட ஆக படவில்லை.

நகரின் முக்கிய சாலை என்பதால் எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நிரம்பிக் கிடந்தார்கள். ஒதுங்குவதற்கு இடமில்லை. அந்த அவசர அவஸ்தை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு எப்போது சிறுநீரைக் கழிப்போம் என்று சிரமப்பட்டு நடந்து கொண்டே இருந்தான்.

அவனால் அந்த வலியைப் பொறுத்துக் கொள்வதற்கு அர்த்தம் மற்றது என்று ஒரு ஓரத்தில் நின்று இயற்கையை உபாதை கழித்தான்.

அப்போது பட்டென்று ஒருவன் சந்தானம் தலையில் வைத்தான்.

அறிவில்லையா? இங்க போயி ஒன்னுக்கு இருந்துட்டு இருக்கீங்க வேற இடம் கிடைக்கலையா? என்று திட்டினான்.

ஐயா உண்மையிலேயே வேற இடம் கிடைக்கல. நான் என்ன செய்றது? எவ்வளவு நேரத்துக்கு நான் அடக்க முடியும் ?

என்று அவரிடம் விதண்டாவாதம் பேசாமல் மென்மையாகச் சொன்னான்.

அதற்குமேல் இவனைத் திட்டுவது நமக்கு இழுக்கு என்று சந்தானத்தை அடித்தவன் ஒதுங்கிக் கொண்டான்.

சந்தானம் இதை ஒரு அவமானமாக நினைத்தான். வேறு வழியில்லை இல்லையென்றால் வயிற்றில் இருக்கும் வாட்டர் டேங்க் உடைந்து வெளியே வந்து விடும் என்ற அளவிற்கு முட்டிக்கொண்டு நின்ற சிறுநீரை வெளியேற்றியது தப்பில்லை என்று ஒரு பக்கம் அவன் மனதிற்குள் தோன்றினாலும் இந்த மாதிரி இருக்கும் பிரதான சாலைகளில் ஒன்றுக்கு இரண்டுக்கு என்று எந்த மனிதர்கள் அவசரம் என்றாலும் அவர்களால் எப்படி ஒதுங்க முடியும்?

யோசித்தவன் அரசாங்கத்திடம் முறையிட்டான்.

ஏங்க தெருவுக்கு தெரு கக்கூஸ் கட்டி வச்சிட்டு இருந்தா, அதை யாரு மெயின்டெய்ன் பண்றது? அதுக்கு சம்பளம் கொடுக்கிறது? முதல் நா நல்லா இருக்கும் .மறுநாள் நாறிப் போகும் .அந்த நாத்தம் இந்த சுத்துப்பட்டு தெருவையே அசிங்கமாக்கிடும். அதனாலதான் நாங்க இங்க பாத்ரூம் கட்டல என்று உண்மையை சொன்னார்கள் அரசாங்கத்தில் உள்ளவர்கள்.

வேறு வழி இருக்கிறதா? என்று ஆலோசித்த சந்தானம் .

மொபைல் பேங்க் இருக்கு. மொபைல் கோர்ட் இருக்கு.

ஏன் மொபைல் கழிப்பறை இருக்கக் கூடாது? என்று யோசித்தான்.

அதை அரசாங்கத்திடம் சொன்னான். அதெல்லாம் முடியாது என்று அரசாங்கத்தினர் கைவிரித்தனர்

அந்தப் பகுதி கவுன்சிலரும் இதையே சொன்னார்.

விற்காததை விற்று சந்தானம் ஒரு மொபைல் கழிவறை வாங்கினான்.

எந்த அவஸ்தையில் துடித்தானாே அந்த அவஸ்தை மற்றவர்கள் படக்கூடாது என்று நினைத்தவன் மொபைல் கழிவறையைத் துவக்கினான்.

அன்றிலிருந்து பிரதான சாலைகளில் அந்த மொபைல் கழிவறை நின்றது.

சுலபக் கட்டணத்தில் அந்த மொபைல் கழிவறை பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தான், சந்தானம்

ஆங்காங்கே மொபைல் கழிவறை வாகனம் நின்றது .அதனுடைய மவுஸ் அதிகமானதால் ஒன்று இரண்டு மூன்று என்று வாகனங்கள் அதிகரிக்க இன்று 10 20 மொபைல் கழிவறையின் முதலாளியாக இருக்கிறான் சந்தானம் .

அவனுடைய இந்த முயற்சியால் இப்போது நகரில் ஆங்காங்கே சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர்கள் , தெருவை அசிங்கம் செய்வார்கள் என்று எல்லாேரும் இந்த மொபைல் கழிவறையைப் பயன்படுத்தினார்கள்.

‘நகர் சுத்தமானது. இந்த சேவையை செய்த சந்தானத்தை அழைத்து பாராட்டியது அரசு.

இந்த அறிவு உங்களுக்கு எப்படி வந்தது?

என்று கேட்டபோது

எதுவும் பட்டால் தான் தெரியும் சார். நான் சிறுநீர் கழிக்க முடியாம ரொம்ப பாடுபட்டேன்.

அந்த பாடு மத்தவங்களுக்கு வரக்கூடாது நினைச்சு தான் இதை நான் பண்ணேன் என்று சந்தானம் சொன்னபோது அந்த அரசாங்க அதிகாரி கைகுலுக்கினார்.

அந்த வருடம் தேசிய விருதுக்குரிய நபராக தேர்வு செய்யப்பட்டான் சந்தானம்.

எதுவும் பட்டால் தான் தெரியும் என்று உணர்ந்து கொண்டனர் மக்கள் .

எங்கோ ஒருவன் சிறுநீர் கழிக்கச் சென்ற போது அவனை மடக்கி பிடித்து ஹாரன் அடித்து வண்டிக்குள் கழிவறை இருக்கிறது அதில் கழியுங்கள் என்றான் சந்தானம் .

அரக்கப் பரக்க ஓடியவன் ஆற அமர இயற்கை உபாதை வெளியேற்றினான்.

நகர் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தது அந்த மொபைல் கழிவறை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *