சிறுகதை

படைப்பு – ராஜா செல்லமுத்து

சமரன் ஒரு படைப்பாளி. சமரசமில்லாத படைப்பாளி. அவரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் எல்லாம் ஒரு சமுக மாற்றத்திற்கான விஷயமாக இருக்கும்.

சாதாரண விஷயங்களை எழுதிக் கொள்ளாத சமரன், சமரசம் இல்லாத பிரச்சினைக்குரிய எழுத்துக்களை, நிகழ்வுகளை விஷயங்களை எழுதத் தவறுவதே இல்லை.

அதனால் அவருக்கு சில எதிர்ப்புகளும் வந்ததுண்டு. அதையெல்லாம் ரொம்பவே லாவகமாகச் சமாளிப்பார்.

எழுத்தாளர் என்றால் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும். அப்போது தான் ஒரு உண்மையான எழுத்தாளனாக இருக்க முடியும் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்வார் சமரன்.

அவரின் வீடு தேடி கூட வில்லங்கம் வரும். துளியும் அச்சமில்லாமல் எல்லாவற்றையும் எதிர் கொள்வார். சமூகம், நாடு என்று பொது நலமாக வாழ்ந்து கொண்டிருக்கும், சமரனுக்கு குடும்ப வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை.

மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து இருந்தனர். குடும்பத்தைப் பற்றி சமரன் கேட்டால் சிரித்துக் கொண்டே இருப்பார். அதற்கான சரியான பதில் சொல்ல மாட்டார். காரணம் பிரச்சனைகள் வேறொன்று இருக்கும் பிரியத்தில் எதை விட்டு எதை சொல்வது? என்று தெரியாததால் தன் குடும்பத்தைப் பற்றி யாரிடமும் சொல்வதில்லை.

நீண்ட நாள் நண்பரான கண்ணன் ஒருநாள் கேட்டார்.

சமரன் உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாம தான் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க? ஆனா குடும்ப வாழ்க்கை தான் உங்களுக்கு குளறுபடியா இருக்கு. மனைவி பிள்ளைகள் எல்லாம் எங்கே? எப்பவோ? கேட்டாலும் அதைப் பத்தி நீங்க சொல்றது இல்லையே? இப்ப சொல்லுங்க என்றார் கண்ணன்.

அதற்கும் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தாரே ஒழிய பதில் சொல்லவில்லை.

இல்ல சிரிப்பு மட்டுமே இதுக்குப் பதிலாக அது நீங்க சொல்லித்தான் ஆகணும் என்று கண்ணன் கேட்க

கண்ணன் எழுத்து கோடிகள கொண்டு சேர்க்காது. ஆனா எங்க குடும்பத்துல இருக்கவங்களுக்கு கோடி கோடியா பணம் காெட்டணும் இப்படி பணம் வர்ற வேலை தான் அவங்களுக்குப் பெருசு. பணம் சம்பாதிக்கணும். அதுல சந்தோஷப்படணும். அப்படின்னு நினைக்கிறவங்க, என்னோட மனைவி, குழந்தைகள் எப்பப் பார்த்தாலும் பணம் இதில் எவ்வளவு பணம் வரும்? அதுல எவ்வளவு பணம்? வரும் அப்படின்னு கணக்குத் தான் பார்ப்பார்களே ஒழிய, எழுத்துக்கோ படைப்புக்காே அவங்க மரியாதை தர மாட்டாங்க.

காரணம் பணம் பணம் பணம். அதனாலதான் என்னை விட்டுடுங்க ரொம்ப தூரம் போயிட்டாங்க.

பணம் பண்ண தெரியாத இந்தப் பன்னாட கிட்ட குடும்பம் நடத்துவது கஷ்டம்னு விட்டு வெளிய பாேய்ட்டாங்க என்று கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னார் சமரன்.

ஆழ்ந்த யோசனைக்குப் பின் பெருமூச்சு விட்டபடியே கண்ணன் தன் இருக்கையிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.

அவங்க சொல்றதும் சரிதான். அவங்க பக்கம் அது நியாயமானது ஆனா, படைப்பு அப்படிங்கறது வேறு. இந்த உலகத்தில படைப்புகளை விட ஒரு மனிதனுக்கு உயர்ந்த இடத்தை வாங்கித் தருவது எதுவும் இல்லை. வாழ்க்கைக்குப் பணம் தேவைதான் ஆனா, அந்தப் பணம் ஒரு சின்ன வட்டத்துக்குள் வேணா உங்களை உயர்த்தும். உலகத் தரத்துக்கு உங்களை உயர்த்தாது.

ஒரு தொழிலதிபர் – இல்ல… பணம் ஈட்டக் கூடிய வேலை செய்பவரா இருக்கிறவர், இந்த வருஷம் ரூ.10 கோடி சம்பாதித்து இருக்கேன். அதுக்கு ஒரு பங்சன் நடத்தப் போறேன். 10 கோடி ரூபாயை ஒருத்தரு வெளியிட, அதை இன்னொருத்தர் வாங்குகிறார். இதுக்கு வாழ்த்துரை வழங்குவார்கள் என்று ஒரு விழா வைக்க முடியாது.

யாரும் வந்து இதுக்குப் பேச மாட்டாங்க. ஆனா, ஒரு கவிதையோ? பாடலாே? இசையாேர அது எந்த வடிவத்திலயும் ஒரு படைப்பாக இருந்தா, அதை நீங்க வெளியிடலாம். ஒரு விழா நடத்தலாம். உங்கள நிறைய பேர் வந்து வாழ்த்திட்டு பாேவாங்க. அதுதான் படைப்புக்கும் பணத்துக்கும் உள்ள வித்தியாசம். கோடி கோடியா சம்பாதிச்சாலும் விழா எடுக்க முடியாது.

ஆனா படைப்பு என்பது வேறு என்று கண்ணன் சொன்னபோது,

நீங்க சொல்றது என்னவோ சரிதான். ஆனா சில ஜென்மங்களுக்கு அது புரிவதில்லை. பணம் சம்பாதிக்கிறது மட்டும் தான் அத்தனையும் சம்பாதிச்சதா அர்த்தம்னு நினைக்கிறாங்க.

அந்தச் சூழலில் வாழற மனிதர்களின் மனநிலை அது.

எனக்கு, மன நிறைவு தருகிற நல்ல விஷயத்தில தான் என மனம் ஈடுபட்டிருக்கும்.

கண்டிப்பா பணத்தைவிட பொருளைவிட என்னுடைய படைப்பு எனக்கு முழு திருப்தி தரும் என்றார் சமரன்.

கீப் இட் அப் என்று அவரின் கைகளை அழுந்தப் பிடித்துக் கைகுலுக்கினார் கண்ணன்.

அந்தக் கைகுலுக்களில் அவரின் படைப்புகளின் வீரியம் தெரிந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published.