சிறுகதை

படிப்பு | ராஜா செல்லமுத்து

கிச்சாஸ் ஒரு நிறுவனத்தில் மாத சம்பளம் வாங்கும் ஒரு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருடைய வருமானம் அவருக்கும் அவர் குடும்பத்தை பார்ப்பதற்கு மட்டுமே சரியாக இருந்தது . அதுவும் சில வேளைகளில் பற்றாக்குறையாக இருக்கும். இதற்கு எல்லாம் அவர் தான் படிக்கும் காலத்தில் படிக்கின்ற படிப்புகள் எல்லாம் முதல் மதிப்பெண் எடுத்து பள்ளி/ கல்லூரி என்று உயர்ந்து நின்றவர்.

அவர் படிக்கும் காலத்திலேயே படிப்பில் புலியாக இருந்தவர். படிப்பிற்கும் பணம் சம்பாதிப்பதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது பிறகுதான் கிச்சாசுக்குத் தெரிந்தது

மனைவி, குழந்தைகள் என்று அவரின் வருமானம் கையை கடித்து நிற்கும். மனைவி ராஜேஸ்வரி தலையில் அடித்துக் கொள்வாள்.

என்னங்க, படிச்சு கோல்ட் மெடல் வாங்கினேன்னு சொல்றீங்க? ஆனா அதுக்குத் தகுந்த வருமானம் இல்லையே பிறகு எதற்கு? இந்த படிப்பு, இந்த பட்டம், இந்த மெடல் எல்லாம் என்று சலித்துக் கொள்வாள் ராஜேஸ்வரி

மனைவி பேசுவதில் உண்மை இருப்பதை தெரிந்துகொண்ட கிச்சா எதுவும் பேச மாட்டார் வாய் திறக்கவே மாட்டார் மற்றவர்களிடம் பேசும்போது கூட மனைவி பேசுவதை நியாயப்படுத்திப் பேசுவார்.

என் பொண்டாட்டி சொல்றது சரிதான். படிக்கிற காலத்துல நான் தான் எல்லாத்தையும் முதல் மார்க், தங்கப்பதக்கம் அப்படி இப்படின்னு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனா எதுவுமே எனக்கது பயன்படல. எனக்கு கீழ படிச்சவன் என்ன விட குறைவா மார்க் எடுத்தவன், ஃபெயிலா போனவன். ஏன்? கல்லூரிக்கு பள்ளி, வராம இருந்தார்களாம் இன்னைக்கு பெரிய பெரிய பணக்காரனா இருக்கானுங்க.

என் பொண்டாட்டி சொல்ற வார்த்தை ஒன்னு எனக்கு பிடி படுது..

அது என்னன்னா படிப்புக்கும் பணம் சம்பாதிக்கிறது எந்தவிதமான சம்பந்தம் இல்லன்னு “அது சரிதான் ..

அவ சொன்னபடிதான் எனக்கு நடந்துகிட்டு இருக்கு. என்ன மாறி நிறைய பேருக்கும் நடக்கலாம்.

என்னன்னா என் கூட படிச்ச மணிகண்டன் இன்னைக்கி மூன்று கம்பெனி உடைய முதலாளி. அவன் சரியா பள்ளிக் கூடத்துக்கு வந்து படிக்கல. ஆனா படிச்ச எத்தனையோ பேருக்கு சம்பளம் கொடுத்து இருக்கான். அவன் கூட படிச்சு பட்டம் வாங்கி தங்கப்பதக்கம் வாங்கி எவ்வளவோ விருதுகளை வாங்குன நான் இன்னிக்கி சம்பளம் வாங்குற ஒரு வேலை ஆளாத் தான் இருக்கேன். ஆனா பள்ளிக்கூடம் பக்கமே வராத மணிகண்டன் இன்னிக்கி முதலாளி.. இது எப்படி அப்படின்னு எனக்கு தெரியல.

ஆனா ஒன்று மட்டும் நல்லா புரியுது.. பணம் சம்பாதிக்கிறதுக்கு அறிவு தேவையில்லை அப்படிங்கிறது.

என் அறிவுக்கு இப்பதான் தெரியுது என்று நண்பர் ஒருவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார் கிச்சா.

அப்போது அவரின் செல்போன் அலறியது.

என்ன அறிவாளி, உங்க அறிவு பற்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்களா? இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் இதையே சொல்லுவீங்க. மறுபடியும் சொல்றேன் படிப்புக்கும் பணம் சம்பாதிக்கிறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

மனைவி ராஜேஸ்வரி செல்போனில் பேசியதற்கு ரொம்பவே ஆமோதித்து தலையாட்டி பேசிக் கொண்டிருந்தார் கிச்சாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *