நீ எல்லாம் மாடு மேய்க்க தான் லாயிக்கு. உனக்கு படிப்பு மண்டையில் ஏறாது என்று வகுப்பாசிரியர் எட்டாம் வகுப்பு மாணவன் ராஜுவை கோபமாக பேசினார். அவர் பேசியதைக்கேட்டு வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தனர்.
ராஜூவுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. அழுதபடியே வகுப்பை விட்டு வெளியேறினான்
இதைக் கேள்விப்பட்ட அவந்து பெற்றோர்
ஏண்டா பள்ளிக் கூடத்துக்கு போகல என்று கேட்டனர் அதற்கு அவன் அம்மா எனக்கு படிப்பு வரமாட்டேங்குது என்றான்.
அடே முட்டாப்பயலே. நீ தான்டா கவனமா படிக்கணும். மத்த பிள்ளைகள் எல்லாரும் உன்ன மாதிரியா இருக்காங்க .நீயும் அவங்கள மாதிரி நல்ல படிடா என்று அறிவுரை சொல்லி சத்தம் போட்டனர். ஆனால் அதற்கு அவன் எனக்கு சுத்தமா படிப்பு மண்டையில எறாது என்று திட்ட வட்டமாக கூறினான் ராஜு.
ராஜு படிப்புக்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது அந்தளவுக்கு அவனது படிப்பு நிலை. அவனது பெற்றோர் ஏழை விவசாயிகள் அவனை படிக்க வைத்து முன்னேற் றமடைய ஆசைப்பட்டார்கள் முடியவில்லை தட்டு தடுமாறி எட்டாம் வகுப்பில் வந்தும் அவனால் படிப்பில் ஈடுபாடு கொடுக்க முடியவில்லை. பெற்றோரும் எவ்வளவோ கண்டித்தும் கெஞ்சியும் பார்த்தார்கள் நாய் வாலை நிமிர்த்த முடியாத கதையாகிவிட்டது. தலைவிதி போல் நடக்கட்டும் என்று அவனை விவசாய வேலைக்கு அழைத்துக் கொண்டனர்.
காலங்கள் உருண்டோடின
இருபது வருடங்கள் கடந்தன வகுப்பாசிரியர் சதாசிவம் ஓய்வு பெற்று ஐந்துவருடங்கள் ஆயின. அவரது மகன்கள் திருமணமாகி வெளியூரில் வசித்தனர். அவரவர் குடும்பத்தைப் பார்த்தனர். ஆசிரியர் சதாசிவத்தை மறந்தனர். அவர் பொருளாதார பிரச்சனையால் மனைவியுடன் வறுமையில் மிகவும் வாடினார்.
இந்தச் சுழ்நிலையில்
ஒரு நாள்
அவர் வீட்டு முன்பு ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து முப்பது வயது இளைஞன் ஒருவன் இறங்கினான். பையில் பழங்கள் மற்றும் சில திண்பண்டங்கள் ஐயா என்று குரல் கொடுத்தான். யாரது என்று சதாசிவம் ஆசிரியர் வெளியே வந்தார். வாசலில் நின்ற அந்த இளைஞனை உண்ணிப்பாக பார்த்தார் அடையாளம் தெரியாமல் விழித்தார்
ஐயா நான் தான் இந்த பழைய மாணவன் ராஜு. மாடு மேய்க்கத்தான் லாயிக்குன்னு என்னைச் சொன்னிங்களே ஞாபகமிருக்கா என்றுக் கேட்க சதாசிவம் ஆசிரியருக்கு நினைவு வந்தது ஓ அந்த மாணவனா என்று தலையை சொரிந்தார்.
ஐயா எனக்கு படிப்பு ஏறல. மாடுகள் எனக்கு கை கொடுத்துச்சி. மாடுகள் நல்லா வளர்த்து அதோட விவசாயமும் செஞ்சேன். இன்னைக்கு பெரிய பால்ப்பண்ணை ; பெரிய தோப்பு; ஏக்கர் கணக்கில் நிலம்வாங்கிட்டேன். நல்ல வசதியா இருக்கேன். படிப்புத்தான் வாழ்க்கை இல்லைங்கய்யா. உழைக்கிற ஆர்வம் இருந்தா போதும்; எந்த தொழிலையும் முன்னுக்கு வரலாமுங்கய்யா. நான் நல்லா இருக்கேன்னா இதுக்கெல்லாம் காரணம் நீங்கதாங்கய்யா. எனக்கு உங்க வார்த்தை ஒரு உத்வேகம் கொடுத்துச்சி . முன்னுக்கு வந்துட்டேன் என்றபடி கையில் கொண்டு வந்த பழங்கள் மற்றப்பொருட்களை வீட்டினுள் வைத்து அவர் கையில் பணக்கட்டுகளை கொடுத்தான்.
அவனை கட்டி அணைத்துக் கொண்டார் கண்களில் நீர்த்துளி வடிய
படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை திறமையிருந்தால் எந்த தொழிலும் முன்னுக்கு வரலாம் நான் உன்னை பள்ளிக்கூட வகுப்பில் அவமானம் படுத்தனுமுன்னு நினைச்சி பேசல. நீ நல்லாப் படிக்கனுமுன்னு பேசுனேன். என்னை மன்னிச்சுடுப்பா. என்றார் ஆசிரியர்.
இதை கேட்ட ராஜு
ஐயா நீங்க தான் என்ன மன்னிக்கனும். நான் நல்ல வரனுமுன்னு நினைச்சி பேசினிங்க. இப்பையும் நான் நல்ல இருக்கேன். எதாவது உதவி தேவைப்பட்டால் உடனே செய்ய காத்திருக்கேன் என்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.