வர்த்தகம்

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.506 கோடி லாபம்

சென்னை, பிப்.7

பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) தனிப்பட்ட நிகர லாபம் 3வது காலாண்டில் ரூ.506.03 கோடியாக இருந்தது.

நடப்பு 2020- 21ம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில் ரூ.23,298.53 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.15,967.49 கோடியுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமான தொகையாகும்.

நிகர லாபம் ரூ.492.28 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.506.03 கோடியானது. நிகர வட்டி வருமானம் 28 சதவீதம் அதிகரித்து ரூ.8,313 கோடியாக இருந்தது. மொத்த செலவினம் 10 சதவீதம் குறைந்து ரூ.16,908 கோடியானது. 2020 -21 அக்டோபர் -டிசம்பர் காலகட்டதில் வாராக் கடன் இடர்பாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.5,432.60 கோடியாக இருந்தது. இது வங்கி முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்த ரூ.4,146.04 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். ஒட்டுமொத்த அடிப்படையில் டிசம்பர் காலாண்டில் பிஎன்பி ரூ.585.77 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம், 2019- 20 இதே காலகட்டத்தில் ரூ.501.93 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது என வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *