சென்னை ஜன 17
பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கனரா வங்கியின் செயல் இயக்குனர் அசோக் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜ்பத் ராய் முயற்சியில்1894–ம் ஆண்டில் நிறுவப்பட்டது.1895–ம் ஆண்டில் இது வங்கி வணிகம் செய்ய துவங்கியது.
பஞ்சாப் நேஷனல் வங்கி தரமான வங்கி நிதி சேவையை நவீன தொழில்நுட்பம் மூலம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் சேவை மற்றும் இதன் மூலம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஆதாரமாக பஞ்சாப் நேஷனல் வங்கி திகழ்கிறது.
உலக அளவில் இன்றும் சிறப்பாக செயல்படும் வங்கி என பாராட்டை பெற்றுள்ளது. தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளருக்கு வணிகத்தில் ஊக்கமளிக்க ஏதுவாக பல்வேறு நவீன திட்டங்களை அறிமுகம் செய்து வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வங்கி இன்டர்நெட் வாங்கி சேவையை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இன்டர்நெட் வங்கி வசதியை வழங்கி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி நவீன தொழில்நுட்பமாக வாட்ஸ்அப் முறையில் வங்கி சேவை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. செல்போனில் இந்த வங்கி சேவை பெற நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
கனரா வங்கியில் இதுவரை எக்ஸிக்யூட்டிவ் டைரக்டராக பணியாற்றி வந்த அசோக் சந்திரா பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் நிதி சேவை நிறுவனங்களின் அமைப்பு அசோக் சந்திராவுக்கு இந்த பதவி உயர்வை பரிந்துரை செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏற்கனவே நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த அதுல் குமார் கோயல் பதவிக்காலம் முடிந்ததால் அசோக் சந்திரா நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனரா வங்கியில் செயல் இயக்குனராக இவர் பல்வேறு நிதி நிர்வாக செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இதற்காக அவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
வங்கி நிதிநிலை நிபுணரான அசோக் சந்திரா வங்கிப்பணிகளில் 33 ஆண்டு அனுபவம் பெற்றவராவார். இவர் கார்ப்பரேஷன் வங்கியில் முதன் முதலாக 1991–ம் ஆண்டில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அசோக் சந்திரா அவரது வங்கிப்பணி காலத்தில் கிராமப்புறம் சிறியநகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்கள் அனைத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் பிராந்திய அலுவலங்களிலும் தலைவராக செயலாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக அசோக் சந்திரா சிறப்பாக செயல்படுவார்.