செய்திகள்

பஞ்சாப் தனியார் பல்கலைக்கழகத்தில் வெளியான மாணவிகளின் ஆபாச வீடியோ : சக மாணவி உட்பட 3 பேர் கைது

கல்லூரிக்கு ஒரு வார விடுமுறை அறிவிப்பு

சண்டிகர், செப்.19–

தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் சக மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் சண்டிகார் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி உட்பட 3 பேர் கைது செய்யபட்டனர். 2 வார்டன்கள் பணி நீக்கம் செய்யபட்டு உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 6 நாட்களுக்கு வகுப்புககள் நடத்தப்படாது என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம், தங்களை ஆபாசமாக எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 24 வரை 6 நாட்களுக்கு வகுப்புகளை பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது. மாணவிகள் அமைதி காக்குமாறு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத்சிங் பைன்ஸ் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதி வார்டன்களும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள் மற்றும் விடுதி நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன.

இதுவரை, பல்கலைக்கழக மாணவிகளின் ஆட்சேபகரமான வீடியோக்களை தயாரித்து பரப்பியதாக மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு மாணவி மற்றும் அவரது 23 வயது ஆண் நண்பன் மற்றும் அவனது கூட்டாளி ஆகிய மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முதல்வர் உத்தரவு

இதற்கிடையே, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் கவலை அளிக்கிறது. நமது பிள்ளைகள்தான் நமது கவுரவம். சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நிர்வாகத்துடன் நான் பேசி வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-

சண்டிகர் பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவி, சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அவை சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளன. இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம். இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *