அமர்தசரஸ், பிப்.6–
பஞ்சாப் மற்றும் அரியாணாவில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த காலநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் 5.5 டிகிரி செல்சியசாகவும், லூதியானா மற்றும் பாட்டியாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 மற்றும் 5.6 டிகிரியாகவும் உள்ளது. இது இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் குறைவாகும்.
பதிண்டா, பரித்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் முறையே 3, 3.5 மற்றும் 4 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை நிலவுகிறது. அண்டை
மாநிலமான அரியாணாவில், அம்பாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.9 டிகிரி செல்சியசைப் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ஹிசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் ஆகும், இது இயல்பை விட 2 டிகிரி குறைவாக இருந்தது.
கர்னாலின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 4 டிகிரி குறைவாகும், நர்னால் மற்றும் ரோஹ்தக் முறையே 9 மற்றும் 6.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் கூட்டுத் தலைநகரான சண்டீகரில் குறைந்தபட்சமாக 7.5 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 2 டிகிரி குறைவாகப் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு இருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.