வாழ்வியல்

பச்சை அவரையில் உள்ள சில மருத்துவ குணங்கள்–1

பச்சை அவரை என்றதும் நமக்கு தெரியாத காயாக உள்ளதே என்று எண்ண வேண்டாம். நம் ஊரில் பீன்ஸ் அல்லது முருங்கை பீன்ஸ் என்று அழைக்கப்படும் காயே பச்சை அவரை ஆகும்.
இது ஆங்கிலத்தில் பைன் பீன், பிரெஞ்சு பீன், ஸ்டிரிங் பீன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பச்சை அவரையில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அடர் பச்சை, இளம் பச்சை, கருஊதா, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இவை காணப்படுகின்றன
பச்சை அவரையில் விட்டமின் ஏ, சி, கே, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவை காணப்படுகின்றன.
மேலும், இதில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாதுஉப்புகள் உள்ளன.
பச்சை அவரையில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, ஆல்பா மற்றும் பீட்டா கரோடீன்கள், லுடீன் சீதாக்ஸைன் உள்ளிட்டவைகளும் காணப்படுகின்றன.
மருத்துவ பண்புகள்
பச்சை அவரையில் உள்ள ப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதயநலத்தை மேம்படுத்துகின்றன. ப்ளவனாய்டுகள் இரத்த குழாய்களில் அடைப்பு உண்டாவதைத் தடைசெய்கின்றன.
இக்காயில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் உடலில் சேருவதைத் தடுக்கிறது. மேலும் இக்காயில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *