செய்திகள்

பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை வீழ்ச்சி

மும்பை, ஜூன் 28–

தொடர்ச்சியாக 3 நாட்கள் உயர்வுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கின.

இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 224 புள்ளிகளும், நிஃப்டி 65 புள்ளிகளுக்கு மேல் இன்று சரிந்தன. இன்றைய (ஜூன் 28 ) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 224 புள்ளிகள் சரிந்து 52,936 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 65 புள்ளிகள் குறைந்து 15,766 புள்ளிகளுடன் வர்த்தகமாகின. 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் மேலும் 376 புள்ளிகளும், நிஃப்டி 118 புள்ளிகள் சரிவை கண்டுள்ளன.

ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி

ஆட்டோ மொபைல் பங்குகள் தவிர ஐ.டி., பவர் உள்பட அனைத்து துறை பங்குகள் 1 சதவீதம் சரிவை கண்டன. சர்வதேச பங்குச்சந்தைகளின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் துவங்கியுள்ளன. சண்டிகரில் இன்று நடைபெறவிருக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எடுக்கப்படும் முடிவுகள், இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த கூடுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், கச்சா எண்ணெய் விலை உயர்வு , அன்னிய முதலீடு வெளியேற்றம் காரணமாக வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 17 காசுகள் குறைந்து, 78.51 ஆக வர்த்தகமாகியது.

Leave a Reply

Your email address will not be published.