சிறுகதை

பக்தி- ராஜா செல்லமுத்து

பக்தி என்பதும் ஆன்மீகம் என்பதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது.

கண்ணன் ஓர் ஆத்திகவாதி கோயில் குளம் என்று எல்லா இடங்களிலும் சுற்றித் திரியக்கூடிய ஒருவன் .

அவனுக்கு செவ்வாய் ,வெள்ளி என்றால் போதும். ஏதாவது ஒரு கோயில் பூஜை புனஸ்காரம் செய்து நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் இட்டு கொண்டால் மட்டும் தான் அந்த வெள்ளியும் செவ்வாயும் அவனுக்கு திருப்திகரமாக இருக்கும்; இல்லை என்றால் ஏதோ ஒன்றை தொலைத்தது போலவே இருப்பான்.

வழக்கம் போலவே அன்று வெள்ளிக்கிழமை கண்ணனும் அவைது நண்பன் சரவணனும் ஊரில் இருக்கும் ஒரு பிரபலமான கோயிலுக்கு சென்றார்கள்.

அங்கு கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. கூட்டம் கொஞ்சம் குறையவும் போகலாம் அப்போதுதான் சாமியை நேரடியாக பார்க்க முடியும் இல்லையென்றால் வேகமாக தள்ளி விடுவார்கள் சாமியை பார்க்க முடியாது என்று நினைத்த இருவரும் கோயிலுக்கு வருவோர் போவோர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு பிரகாரங்களில் சுற்றிக்கொண்டு அங்கிருக்கும் சிலைகளைப் பற்றி பேசிக் கொண்டும் இருந்தார்கள்.

ஆனால் கருவறைக்குள் அவர்கள் காலடி எடுத்து வைக்கவில்லை. இறைவனை சிறிது நேரம் ஆவது தரிசிக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆவல் .

அதனால் கோயில் வளாகத்திலேயே சுற்றிக்கொண்டு இருந்தார்கள். ஆட்கள் குறைய எப்படியாவது சிறிது நேரம் சாமியை தரிசித்து விட வேண்டும் பிரசாதம் திருநீர் குங்குமம் பெற்று நெற்றி நிறைய பூசி விட வேண்டும் என்ற சந்தோஷத்தில் இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் பிரகாரத்தை சுற்றி விட்டு ஓரிடத்தில்

‘‘என்ன கண்ணன் எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு தான் ஒக்காருவாங்க. நீ சாமி கும்பிடாமலே உட்கார்ற’’ என்று சரவணன் கேட்க

அதனால ஒன்னும் இல்ல கடவுள் எப்போதும் நம்ம பக்கம் இருப்பார். அவரை நேரடியா சிறிது நேரம் தரிசிக்கணும் அப்படிங்கறது தான் ஆசை. அதனாலதான் உட்கார்ந்திருக்காேம் என்று கண்ணன் பதில் சொன்னான். ஆட்கள் குறைந்தார்கள். சரவணனும் கண்ணனும் கருவறை நோக்கி நடந்தார்கள்.

அப்போது ஒரு சிறுவன் சாமியை கும்பிட்டு விட்டு ஏதோ அந்த கருவறைக்கு முன்னால் இருக்கும் சிலையை தொட்டுவிளையாடினான்.

இதைப் பார்த்த அந்தக் கோயில் பூசாரி அவனை அடித்து கீழே தள்ளி விட்டார். இது எல்லாம் தொடக்கூடாது எதுக் எல்லாம் தொடக்கூடாது என்று பூசாரி சாெல்ல

எதுக்குடா அதத் தாெட்ட என்று சிறுவனின் பெற்றோர்களும் சாென்னார்கள்.

இதைப் பார்த்த கண்ணனுக்கு சுரீர் என்றது.

ஏன் இந்த பூசாரி இப்படி செய்கிறார்? இது தவறு இல்லையா? கடவுள் கூட இந்த குழந்தை உருவத்தில் வந்திருக்கலாம்? அது தெரியாம அந்த குழந்தையை இப்படி அடிச்சு துரத்துறாரு .இவங்ககிட்ட போய் நான் பிரசாதம் வாங்க போறதில்ல. இவ்வளவு நேரம் இவருக்காக காத்துகிட்டு இருந்தது தப்பு என்று உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறினான் .

என்ன கண்ணன் இவ்வளவு நேரம் காத்திருந்து சாமி கும்பிடாம போறியே .இது தப்பு இல்லையா என்று சரவணன் கேட்க

இரக்கமே இல்லாத பூசாரிட்ட நான் சந்தனம் குங்குமம் வாங்க போறது இல்ல. இவர் பண்ணது தவறான செயலாக இருக்கு. நான் பாத்தது தப்பா இருக்கு. மனுஷங்க கிட்ட அன்பு இல்லாதத குழந்தைக கிட்ட ஆசை இல்லாத மனுஷன் கிட்ட எப்படி நான் வரத்த எதிர்பார்க்க முடியும் .வேண்டாம் என்று அழுது கொண்டு ஓடும். அந்தக் குழந்தை நோக்கிச் சென்றான் கண்ணன் .

அவர்களின் பெற்றோர்கள் நடந்து கொண்டே சிலை எல்லாம் தொடக்கூடாது ; அறு தப்பு என்று அவர்களும் சிறுவனுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே வந்த கண்ணன் சிறுவனை தொட்டு கும்பிட்டு, அழாதே என்று குழந்தைக்கு ஆறுதல் சாெல்லிவிட்டு,

குழந்தைக்கு என்னங்க தெரியும் ? ஏதோ சிலய தொட்டுருச்சு. அதுக்காக அடிப்பாங்களா? இந்தப் பூசாரி சரியில்லை என்று அந்த குழந்தையைத் தொட்டு வணங்கி விட்டு வெளியேறினான் கண்ணன்.

இது சரவணனுக்கு புரியாமல் இருந்தது.

என்ன கண்ணன் சாமிய கும்பிடாம இந்த குழந்தைய கும்பிடுற? என்று கேட்க

எதுவுமே தெரியாத அந்த குழந்தை தான் எனக்கு சாமி என்று சொல்லி பிரகாரங்களில் இருக்கும் தூணில் கடந்த திருநூறு குங்குமம் எடுத்து பூசினான் கண்ணன்.

இத ஏன் எடுத்து பூசுற ?என்று சரவணன் கேட்க

இரக்கமே இல்லாதவங்கக்கிட்டே இருந்து குங்குமம் திருநீறு வாங்குறத விட எத்தனையோ பேர் எத்தனையோ பிரார்த்தனைகளை செய்து சாமி கும்பிட்டுட்டு இங்க பாேட்டுட்டு பாேன திருநீறு, குங்குமத்துக்கு வலிமை அதிகம் என்று சொல்லி நெற்றி நிறைய அதை அப்பிக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறினான் கண்ணன்.

அவனை பின் தொடர்ந்தான் சரவணன்.

குழந்தைக் கண்ணன் போகும் திசையைப் பார்த்து சிரித்தது.

Leave a Reply

Your email address will not be published.