“வழக்கம் போல் அன்றும் அந்தக் கல்லூரியின் காலை வகுப்புகள் தொடங்கின. பேசிக் கொண்டிருக்கும் மாணவர்களை அமைதிப்படுத்தினார், பேராசிரியர் செல்வி.
“எல்லாரும் பேசாம அமைதியா இருங்க. இன்னைக்கு நாம பார்க்கப் போற பாடம் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் நினைவா வைக்கப்பட்ட சாலையைப் பற்றித்தான் பார்க்கப் போறோம்” என்று அவர் சொன்னபோது வகுப்பில் இருந்த மாணவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர்.
“பக்தவத்சலம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். மீஞ்சூர் பக்தவச்சலம், அப்படிங்கிறதுதான் அவருடைய உண்மையான பேரு. இவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். 1897 அக்டோபர் மாதம் 9–ந் தேதி சென்னை மாகாணத்தில் நாசரத்பேட்டைங்கிற கிராமத்தில சைவ வேளாளர் குடும்பத்தில பிறந்தவர். இவரது தந்தை 5 வயசிலேயே இறந்துட்டாரு. மாமா முத்துராமலிங்கம் தான் இவரை வளர்த்தாங்க. சென்னையில் பள்ளிப் படிப்ப முடிச்சிட்டு, சென்னை சட்டக் கல்லூரியில சேர்ந்தார்.
“அதுக்கப்புறம் என்ன செஞ்சார் மேடம்?” என்று ஒரு மாணவர் கேட்க,
“அதுக்கப்புறம்,1923 பட்டப்படிப்பு முடிச்சதும், சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். படிக்கும்போதே பக்தவச்சலம் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 1926ல காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினரான பக்தவத்சலம் இந்தியாங்கிற தினசரி செய்தித்தாளைத் தொடங்கினாரு.
” அப்புறம் மேடம்” “1932–ம் ஆண்டு வேதாரண்யத்தில நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது, பக்தவத்சலம் காயமடைஞ்சாரு. 1932–ம் ஆண்டு சுதந்திர தின இந்தியா கொண்டாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாசம் அமராவதி சிறையில அடைக்கப்பட்டுப் பெரும் சிரமத்திற்கு ஆளானார். 1936 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தல்ல வெற்றி பெற்று, சென்னை நகரக் கழகத்துக்குத் துணை மேயர் ஆனார்.
“அப்புறம் தேர்தல்ல நின்னாரா மேடம்?”
“ஆமா, 1937–ம் ஆண்டு நடந்த தேர்தல்ல திருவள்ளூர் தொகுதியில போட்டிட்டு வெற்றி பெற்று, 40 வயதில சென்னை சட்டமன்றத்தில் நுழைந்தார். ராஜாஜி அரசாங்கத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர், நாடாளுமன்ற செயலாளரா பக்தவத்சலம் இருந்தார். ஐக்கிய ராஜ்யத்தின் போர் பிரகடனத்தைத் தொடர்ந்து பக்தவச்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் பொறுப்பு ஏற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் பக்தவச்சலம் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் தகவல் துறை அமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திர இந்தியா முதல் சட்டமன்ற தேர்தலில் அதாவது 1952 சட்டமன்றத் தேர்தல்ல பொன்னேரி தொகுதியில் தோல்வி அடைந்தார். அடுத்து 1957–ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குப் போனார்.
காமராஜர் அமைச்சர் அவையில உள்துறை அமைச்சர். தமிழ்நாடு சட்டமன்ற தலைவராகவும் இருந்தார். 1962–ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக மாநிலத்தின் அரசாங்கத்தை அமைத்தது. மறுபடியும் ஸ்ரீபெரும்புதூரில் வெற்றி பெற்ற பக்தவத்சலம் சட்டமன்றத்தில் நுழைந்தார். காங்கிரஸ் கட்சி அலுவலகப் பொறுப்பில் அதிக நேரம் செலவிட்டதாக ராஜினாமா செய்தார்.
1963 காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ந் தேதி, தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கடைசி முதலமைச்சர்.
” விவேகானந்தர் பாறைக்கும் இவருக்கும் தொடர்பு ஏதாவது இருக்கா மேடம்?” என்று மாணவி கேட்க
” நீங்க கேட்டது நிஜம். ஆகஸ்ட் 1963 ஆர் எஸ் எஸ் அமைப்பு எம்.எஸ். கோல்வால்கர்
விவேகானந்தர் நூற்றாண்டு குழுவையும் விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் நிறுவி அதன் செயலாளர் ஏக்நாத் ரானடே வை நியமித்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவில் அவரை கௌரவிக்கும் வகையில் கன்னியாகுமரி பாறை நினைவுச் சின்னத்தைக் கட்டுவது குழுவின் முக்கிய பணியா எடுத்துக்கிட்டாங்க. இதை முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், ஹுமாயூன் கபீர் கடுமையாக எதிர்த்தனர். பிறகு 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு பின் பக்தவத்சலம் சம்மதித்தார்.
” மேடம், இவர் காலத்தில இந்தி எதிர்ப்புப் பாேராட்டம் எப்படி இருந்தது?” என்று ஒரு மாணவர் கேட்க,
” இவர் ஆட்சிக் காலத்தில கடுமையான இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இந்தியைக் கட்டாய மொழியாக்க பக்தவத்சலம் ஆதரித்தார். அது மட்டுமில்லாம கல்லூரிகளில் தமிழைப் பாடமாகப் படிக்கும் முறையை எதிர்த்தார். இது நடைமுறையின் முன்மொழிவு அல்ல. தேசிய ஒருங்கிணைப்பு. நலன்களுக்காகவும் அல்ல. மாணவர்களுக்காகவும் அல்ல. என்று கூறினார். 1964 சென்னை சட்டமன்ற கூட்டத்தில் பக்தவக்சலம் ஆங்கிலம் இந்தி, தமிழ் ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தார். இந்திய நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டு 15 ஆண்டுகளில் தீவிரமடைந்தது.
” இந்தி எதிர்ப்பு போராட்டத்த பல பேர் உயிர் போனதாமே? உண்மையா? என்று ஒரு மாணவி கேட்க
” ம்… 1965 ஜனவரி 26ம் தேதி போராட்டங்கள் தீவிரமடைந்து காவல் துறை நடவடிக்கை மற்றும் உயிரிழப்பிற்கு வழிவகுத்தன. காவல் துறை நடவடிக்கையால் நிறைய உயிரிழப்பு ஏற்பட்டன. போராட்டங்களில் ஆறு பேர் சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து மற்றும் சாரங்கபாணி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூன்று பேர் தண்டபாணி முத்து மற்றும் சண்முகம் விஷம் குடித்தனர்.
போராட்டங்களை ஒருவரான 18 வயது ராஜேந்திரன் 65–ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி காவல்துறை துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். 1965–ம் ஆண்டு இந்திய தீர்ப்பு போராட்டங்களின் பொதுச் சொத்துக்கள் பெருமளவு அழிக்கப்பட்டதற்கு வன்முறைக்கும் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் இடது சாரிக் கட்சிகளும் தான் காரணம் என்று பக்தவக்சலம் பிப்ரவரி 13, 1965ல் கூறினார்.
” இவர் நடவடிக்கைக்கு யாராவது எதிர்வினையாற்றினார்களா?”
” ஆமா, ஜனவரி 2015 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் இருந்து ராஜினாமா செய்த போது இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கொன்றதற்கு பக்தவத்சலமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
” இவரால ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கா?”
” ஆமா, காமராஜரால் தொடங்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தில் மானிய விலை அரிசி விநியோகத்தை முடிவு கொண்டு வந்ததற்கும், தமிழ்நாட்டில் காமராஜர் பொற்கால ஆட்சி முடிவுக்கு வந்ததற்கும் பக்தவச்சலம் தான் காரணம் என்று சொல்லப்பட்டது. “
” அவருடைய கடைசி காலம் எப்படி இருந்தது ? “
“பக்தவத்சலம் தன்னோட 89 வயதில் தான் இறந்தார். அவரது கல்லறை கிண்டியில் உள்ள காமராஜர் கல்லறைக்கு அடுத்ததாக உள்ளது பக்தவச்சலம் தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதி. இந்திய காங்கிரஸ் அரசியல் முக்கியமானவர். முன்னாள் முதலமைச்சர் பி.டி. ராஜனின் மைத்துனர். இவரின் மகள் சரோஜினி வரதப்பன் சமூக ஆர்வலர். அவரது பேத்தி ஜெயந்தி நடராஜன் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி.
இப்படி பக்தவத்சலத்தைப் பற்றிய முழு விவரத்தையும் பேராசிரியர் செல்வி சொல்லி முடித்தார். பக்தவத்சலத்தைப் பற்றிய அவ்வளவு விஷயங்களையும் தெரிந்து கொண்ட மாணவர்கள் “சில நேரங்கள்ல தமிழ்நாட்டுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு இருக்காரு. தமிழ்நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டு இருக்காரு. இவர் நினைவா தான் பக்தவத்சலம் சாலைன்னு பேர் வச்சிருக்காங்களா?” என்று ஒரு மாணவர் கேட்க,
” ஆமா, அதுக்கு முன்னாடி அந்தச் சாலை பிரிட்டிஷ் அதிகாரி வாரன் ஹேஸ்டிங்ஸ் பெயரில் இருந்த சாலை தான், பக்தவத்சலம் சாலையா இப்ப மாறி இருக்கு.
இவருக்கான நினைவிடம் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு முன்னால இருக்க கூடிய காமராஜர் நினைவகத்துக்குப் பக்கத்துல பக்தவத்சலம் நினைவிடமும் இருக்கு” என்று பேராசிரியர் செல்ல, மாணவர்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தைப் பற்றியும் பக்தவத்சலம் சாலையை அறிந்த சந்தோஷத்திலும் இருந்தார்கள். வாரன் ஹேஸ்டிங்ஸ் சாலைக்குள் உயிர் பெற்று நின்று கொண்டிருந்தது, இன்றைய பக்தவத்சலம் சாலை
![]()





