ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு
சென்னை, ஜூலை23-–
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை தேசிய தலைவராக கொண்டு செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ம் தேதியன்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் 16-வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக யாரை நியமிக்கலாம்? என்பது தொடர்பாக மாயாவதி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் அடிப்படையில் தமிழக பகுஜன் கட்சியின் மாநில ஒருங்கி ணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம் செய்யப் பட்டுள்ளார். மாநில தலைவராக வக்கீல் பி.ஆனந்தன், துணை தலைவராக டி.இளமான் சேகர், பொருளாளராக கமலவேல் செல்வன் நியமிக்கப் பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பினை தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப் பாளர்கள் வெளி யிட்டுள்ளனர்.