சிறுகதை

பகட்டு – ராஜா செல்லமுத்து

திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், விழாக்கள் என்று எதுவாக இருந்தாலும் கழுத்து நிறைய நகைகளை அணிந்து கொண்டு நகைக் கடை பொம்மை போல தன்னை அலங்கரித்துக் கொண்டு செல்வார் விசாலினி.

அப்படிப் போவதில் அவளுக்கு ஒரு அலாதி விருப்பம். மற்றவர்களைவிட தான் பணக்காரி என்பதை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று விரும்புபவர் அவர்.

அதனால் தான் விழாக்கள் இல்லை என்றால் கூட யாரும் தன்னை விழாக்களுக்கு கூப்பிடாமல் இருந்தால் கூட எல்லா விழாக்களுக்கும் முன் வந்து செல்லும் பழக்கம் உடையவள் விசாலினி.

அவள் அப்படி வந்தால் அந்த விழாவிற்கு வருபவர்களின் கண்களெல்லாம் விலாசினியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த அளவிற்கு அவளின் கழுத்து நிறைய நகை கொட்டிக்கிடக்கும்.

அது அவளின் உண்மையான நகையா? இல்லை பொய் நகையா? இல்லை பாேலியா இல்லை? கவரிங்கா? என்பது யாருக்கும் தெரியாது .

அவள் நடமாடும் நகைக்கடை அந்த விழாவிற்கு போனால்த்தான் அவளின் மனது சாந்தி அடையும். இல்லை என்றால் ஏதோ குறைபட்டுக் கொண்டதாகவே நினைத்துக் கொண்டிருப்பாள் விலாசினி.

அதனால் அவளுடன் செல்பவர்கள் எல்லாம் அவளை ஒதுக்க ஆரம்பித்தார்கள். காரணம் மற்றவர்களை விட அவள் தனித்து தெரிவாள் என்பதே மற்றவர்களின் எண்ணமாக இருந்தது.

இருந்தாலும் விடாப்பிடியாக வராத ஆட்களைக் கூட வலுக்கட்டாயமாக ஒவ்வொரு விழாக்களுக்கும் அவர்களை அழைத்து செல்வது விலாசினியின் வழக்கம்.

அப்படித்தான் இன்று நடக்கவிருக்கும் ஒரு விழாவிற்கு அவள் போவதாக தன்னை அலங்கரித்துக் கொண்டு போகும் விழா அன்று அந்த விழாவிற்கு அவ்வளவு நகைகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு தான் செல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

அதன்படியே பக்கத்து வீட்டு பெண்ணிடம் நகை கேட்டாள். அதுவும் கவரிங் நகைகள் தான். அவள் இல்லை என்றாள்.

இன்னொரு தெரிந்த பெண்ணிடம் கவரிங் நகைகளைக் கேட்டார் அவளும் இல்லை என்றாள்.

தனக்கு தெரிந்த எல்லாம் நபர்களிடமும் கவரிங் நகைகளைக் கேட்டாள். அவர்கள் எல்லாம் அடிக்கடி போட்டால் நகைகள் கறுத்துப் போகும் என்று தர மறுத்தார்கள்.

யாரும் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை உரசிப் பார்த்து இது தங்கமா? ஒரிஜினலா? போலியா? என்று கேட்கப் போவதில்லை என்ற தைரியத்தில் தான் அவள் இவ்வளவு நகைகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.

அதனால் எங்கெங்கோ கேட்டுப் பார்த்தவள், கடைசியாக யாரும் தர மறுக்கிறார்கள் என்று தன்னுடைய வீட்டில் இருந்த தன்னுடைய நகைகளை எடுத்து அணிந்து கொண்டாள்.

அவளுக்குள்ளே ஒரு எண்ணம் தோன்றியது.

நம்ம நகைகளை அடிக்கடி எடுத்துப் போட்டா கருத்துப் போகும். அடுத்தவங்க கிட்ட கேட்கிறோம். ஆனா, அதைக் கூட அவங்க தர மறுக்கிறார்கள்.

என்ன இது? என்று அவளுக்கு அவளை சிரித்துக் கொண்டு நகைகளை அள்ளி கழுத்தில் போட்டுக் கொண்டு திருவிழாவிற்கு கிளம்பினாள்.

அவள் நகை கேட்ட நண்பர்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள்.

‘வீட்டுல கவரிங் நகைகளை கிலோ கணக்கில் அள்ளி வச்சிக்கிட்டு நம்மகிட்ட இரவல் கேட்டு வாங்கிட்டு போயி, அப்படி ஒரு பகட்டு பந்தா காமிக்கணுமா? எவ்வளவு நாளைக்குத்தான் ஓசியில கொடுக்கிறது. அவளது மானம் மட்டும் கெட்டுப் போகக் கூடாது. மத்தவங்க மானம் எக்கேடும் கெட்டுப் போகனுமா? இனிமேல் அவளுக்கு கொடுக்கிறதில்லை. அவ பகட்டுக்கு அவளே பகடைக்காயாக இருக்கட்டும்’ என்று நண்பர்கள் சொன்னார்கள் .

அன்று நடந்த விழாவிற்கு தன்னை நடமாடும் நகைக்கடை பாேல அலங்கரித்து நடந்து சென்று கொண்டிருந்தாள் விசாலினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *