வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி, காய்ச்சல், இருமலை குணமாக்கும் வெல்லக்கட்டி

வெல்லம் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்புப் பொருட்களை தயாரிப்பதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை பயன்பாடே அதிக அளவில் உள்ளது. அதிரசம் போன்ற பல இனிப்பு வகைகளில் பெரும்பாலும் வெல்லக்ட்டி நாட்டுச் சர்க்கரையே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் எதுவும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும். குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் பல விதமான நோய்களை தவிர்க்கலாம். இந்நிலையில் வெல்லம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் .

வெல்லத்தில் உள்ள சத்துக்கள்

வெல்லத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள்உள்ளன. இந்த சத்துக்கள் பல நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் எடை கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை எடையை அதிகரிக்கச் செய்யும் அதே வேளையில் வெல்லத்தை உட்கொள்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது பெரிதும் நன்மை பயக்கும். வெல்லத்தில் உள்ள சத்துக்கள் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்க வேலை செய்கிறது. இதன் காரணமாக இரத்தம் ஓட்டம் சீராகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

குளிர்காலத்தில் நன்மை பயக்கும் வெல்லம்

வெல்லம் உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் உடல் சூடாக இருக்கும். குளிர் உங்களை தாக்காது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல் போன்ற நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது. கருப்பட்டியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *