வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டு தினமும் 2 பல் துண்டு சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பூண்டின் மருத்துவ பயன் ஏராளம். அவற்றை அறிய தொடர்ந்து படியுங்கள்:–

உடல் பருமனையும் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

பூண்டு இதய அடைப்பை நீக்கும்; இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.

இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.

பூண்டு சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சளித் தொல்லையை நீக்கும். தொண்டை சதை கரையும். மலேரியா, யானைக்கால், காசநோய் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். தாய்ப்பால் சுரக்கும். மாதவிலக்குக் கோளாறுகளைச் சரி செய்கிறது.

சளித் தொல்லை நீங்க:

1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.

2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.

3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலுரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துப் பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *