அறிவியல் அறிவோம்
நாம் சுவாசிக்கும் காற்றில் 78% நைட்ரஜன், கிட்டத்தட்ட 21% தான் ஆக்ஸிஜன். வெயில் குளிர் மாற்றம் அதிகம் உள்ள நாடுகளில் நைட்ரஜன் மட்டுமே கொண்டு காற்றடிப்பது எரிபொருள் மிச்சத்திற்கும் மற்றும் காற்று அளவை சீராக வைத்துக்கொள்ளவும் சிறிது உதவும்.
ஏனெனில் நைட்ரஜன் ஓரு மந்த வாயு (inert gas) வேறு பொருட்களோடு எளிதில் எதிர்வினை செய்வதில்லை. ஆனால் ஆக்ஸிஜன் மற்ற வேதியல் பொருட்களோடு எளிதில் சேர கூடியது (உதாரணம் இரும்பு).
ஒரு வித்தியாசமும் இல்லை இரண்டிலும் காற்று தான் அடைக்கப்படுகிறது. அடைக்கப்பட்ட காற்றைப் பொறுத்து அதன் பயன்கள் , நன்மைகள் மாறுபடுகிறது.
ஆனால் நைட்ரஜன் அடைக்கப்பட்ட சக்கரமே சிறந்தது .
கோடை காலத்தில் கார் டயர் வெடிக்கும் சம்பவங்களும் அதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படுவது குறித்த சமபவங்களும் அதிக அளவில் நடக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், டயரில் இருக்கும் காற்று வெப்பத்தால் விரிவடைவதுதான்.
கோடை காலத்தில் நீண்ட நேரம் காரை ஓட்டும்போது டயர் சூடாகிறது. இது டயருக்குள் இருக்கும் காற்றின் குளிர்ச்சித் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காற்று விரிவடைவதால் காற்றழுத்தம் வெகுவாக உயர்ந்து டயர் வெடிப்புக்கு வழிகோலுகிறது. உதாரணத்திற்கு ஒவ்வொரு 10 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை உயர்வுக்கும் 1.9% அளவுக்கு காற்றழுத்தத்தில் வேறுபாடு ஏற்படும். அதாவது, 0.9 பிஎஸ்ஐ அளவு காற்றழுத்தம் மாறுபடும்.
சாதாரண காற்றைவிட நைட்ரஜன் வாயுவானது குளிர்ச்சித் தன்மை மிகுந்தது. இதனால் வெளிப்புற வெப்ப நிலை மற்றும் உராய்வு காரணமாக சூடான போதிலும் நைட்ரஜன் வாயுவின் வெப்பநிலையில் அதிக மாற்றம் ஏற்படாது.
இதனால் நைட்ரஜன் வாயு நிரப்பிய டயர்களில் காற்றழுத்தம் சீராக இருப்பதால் டயர் வெடிப்புக்கு வாய்ப்பு குறைவாகிறது.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் நைட்ரஜன் வாயு நிரப்பிச் செல்வது பாதுகாப்பானது.
நைட்ரஜன் வாயுவை நிரப்பும்போது காற்றழுத்தம் சீராக பராமரிக்கப்படுவதால் மைலேஜ் சிறப்பாக இருக்கும்.
சாதாரண வாயுவை நிரப்பும்போது அதில் இருக்கும் ஆக்சிஜன் ஆக்சிடேசன் எனப்படும் வேதி மாற்றம் அடைந்து சில சமயங்களில் சக்கரங்களின் ரிம் பகுதியில் துருப்பிடித்து பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் நைட்ரஜன் வாயு நிரப்பும்போது ரிம் பகுதி அதிக பாதிப்புகளை சந்திக்காது. இதுவும் மிக முக்கிய பாதுகாப்பு விஷயம்.