செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்தது: 140 பேர் பரிதாப பலி

Makkal Kural Official

அபுசா, அக். 17–

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

மக்கள் 140 பேர் பலி

இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியுள்ளது.

அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 140 பேர் இதுவரை உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவாதக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *