செய்திகள்

நேரு உருவாக்கிய சொத்துகளை விற்க சதி: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி, ஆக. 26–

பொதுமக்களின் நலனை முன்னிட்டு, பொதுத் துறைகளில் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய சொத்துகளை, வேண்டிய முதலாளிகளிடம் விற்க பாரதீய ஜனதா அரசு சதி செய்வதாக காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய பணமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய அரசின் சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள சாலைகள், ரெயில் நிலைங்களை தனியாருக்கு விட்டு பணமாக்குவது என்று நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.

விற்பது ஏற்புடையதல்ல

இதுகுறித்து இன்று மல்லிகார்ஜுன கார்கே கண்டித்து பேசியதாவது:–

பொதுத் துறைகளில் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய சொத்துகளை, தங்களுக்கு வேண்டிய பெரு முதலாளிகளிடம் விற்க பாரதீய ஜனதா அரசு சதி செய்து வருகிறது. இது நாட்டை பாதிப்புக்குள்ளாக்கும். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கான வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். அரசின் சொத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றே நாங்கள் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *