போஸ்டர் செய்தி

நேபாள விமான நிலையத்தில் இன்று ஹெலிகாப்டர் மீது விமானம் மோதியது: 3 பேர் பலி

காட்மண்டு, ஏப்.14–
இன்று (ஞாயிறு) காலை நேபாளத்தில் லுக்லாவில் உள்ள டென்சிங் ஹிலாரி விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
நேபாள நாட்டில் உள்ள டென்சிங்- ஹிலாரி- லுக்லா விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து இறங்கியுள்ளது. ஆனால் அது நிற்பதற்கு பதிலாக அங்கிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு உள்ளனர்.
நேபாள நாட்டில் மிகவும் பரப்பரப்பாக இயங்கக்கூடிய விமான நிலையம் இது. விமானத்தில் பயணிகள் இல்லை. இருந்திருந்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விமான ஓட்டியும், பாதுகாப்பு ஊழியரும் பலியானார்கள். எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவு வாயிலாக இருப்பது லுக்லா விமான நிலையம். விமானம் மேலே புறப்பட தயாரான போது இந்த விபத்து நடந்துள்ளது. 500 மீட்டர் தூரம் ஒரு பாதையில் தேர்ச்சி பெற்ற விமான ஓட்டிகளே, விமானத்தை ஓட்டுவது மிகவும் சிரமந்தானாம்.
மோசமான வானிலை, போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் கடந்த காலத்தில் பல விபத்துக்கள் நடந்துள்ள. அப்படி 2008–ல் நடந்த ஒரு விபத்தில் விமானப் பயணிகள் 18 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *