நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.உடலை எந்த நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலை எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு குடித்தால் போதுமானதாகும்.
எலும்புகளுக்கு… எலும்பு உறிஞ்சி என்னும் செல்கள் எலும்பினை எளிதில் உடைய செய்யும் தன்மையுடையவை. இந்த நெல்லிக்காய் சாறினை தினமும் பருகினால் இந்த செல்களை குறைத்து எலும்பின் பலத்தினை அதிகரிக்கும்.
நச்சுக்களை நீக்க ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும். மேலும் ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையானது கூடும். மேலும் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்க உதவுகிறது. இரத்தம் சுத்தமாக இருப்பதால் உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.
நீரிழிவு நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
உடல் எடை குறைய நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், நெல்லிக்காயில் உள்ள புரோட்டின்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை படிப்படியாக குறைவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.