நல்வாழ்வுச் சிந்தனைகள்
மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில்சிறந்த மருந்து. இது பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
எனவே உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் அவஸ்தைப்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.
எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். எலும்புகள் ஆரோக்கியமாகும்
எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள் : புற்றுநோய் வராது.