வாழ்வியல்

நெற்று தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் நவீன முறை

நெற்று தேங்காயைப் பயன்படுத்தி நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் உத்தியில் டாடா நவீன டெக்னிக் கண்டுபிடித்துள்ளது.

நம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில் தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மிக எளிமையாக நம்முடைய வீட்டில் உள்ள தேங்காயை வைத்தே பூமிக்கு அடியில் ஓடும் நிலத்தடி நீர்த்தடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

ஒரு ( நெற்று ) தேங்காவை எடுத்து உறித்து (குடுமி மட்டும் உள்ளவாறு) மெதுவாக ‘எல்’ (ட) வடிவில் உங்கள் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக் கொண்டு நிலத்திற்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அப்போது எங்கு பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப் பகுதிக்கு தேங்காவைக் கொண்டு சென்றால் தேங்காயின் குடுமி 90 டிகிரியில் வானத்தை நோக்கி இருக்கும். இப்படி 90 டிகிரியில் தேங்காயின் குடுமி இருந்தால் அங்குதான் தண்ணீர் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மிக சுலபமான முறையில் நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் முறைகளில் ஒன்று தேங்காயை வைத்துப் பார்க்கும் முறையாகும். டாடா சோசியல் சயின்ஸ் அமைப்பு உலர் தேங்காயைப் பயன்படுத்தி நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் எளிய நவீன உத்தியினைக் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *