செய்திகள்

நெமிலி ஊராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் சந்திரகலா ஆய்வு

Makkal Kural Official

ராணிப்பேட்டை, ஜன. 11:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெடும்புலி ஊராட்சியில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 6 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்

கீழ்வெண்பாக்கம் ஊராட்சியில் ஏற்னவே செயல்பட்டு வரும் நர்சரி பண்ணையில் கூடுதல் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கீழ் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். நெல்வாய் ஊராட்சியில் PM JANMAN திட்டத்தில் தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் 33 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

பனப்பாக்கம் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி ரூ49 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், சந்தைமேடு பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 2 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநிர் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், குச்சிபனந்தோப்பு பகுதியில் கலைஞர் நகர்புபற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், பனப்பாக்கம் பேரூராட்சியில் 15வது நிதி ஆணையத்தின் தேசிய சுகாதார இயக்கம்கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பனப்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், தூய்மை இந்தியா திட்டம் 2.0 ன் கீழ் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் திரவக் கழிவு மேலாண்மை மையம் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.செ.சரண்யாதேவி, செயற்பொறியாளர் செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் பேரூராட்சி அம்சா, உதவி செயற்பொறியாளர் ஊராட்சிகள் ஜெரார்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, சிவகுமார், செயல் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் ராஜலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாறன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *