சினிமா

‘நெகடிவ் ரோல் எனக்கு கொள்ளை ஆசை’: தேவந்தி

லண்டனில் அமெரிக்க நிறுவனம ஒன்றில் கை நிறைய சம்பளம் வாங்கிய வேலையை உதறித் தள்ளிவிட்டு நடிக்க வந்தவர் இப்போது சென்னையிலேயே நிரந்தரமாக முகாமிட்டிருக்கிறார் இந்து இன்றும் எனப்படும் தேவந்தி.

முதலில் வீரகேசவன் என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதை தொடர்ந்து என்றென்றும் புன்னகை, வெண்ணிலா வீடு, அம்மாவின் கைப்பேசி, நினைத்தது யாரோ, காதலுக்கு கண்ணில்லை கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் என்று பல படங்களில் அம்மா வேடத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து பாராட்டு பெற்றார்.

வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் இளவரசி, முந்தானை முடிச்சு, முத்தாரம், வந்தாளே மகராசி காக்க காக்க விதி ஏழாம் உயிர் உள்ளிட்ட பல தொடர்களில் வில்லி வேடங்களை ஏற்று இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானவர் தேவந்தி.

நெகட்டிவ் ரோலில் நடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் மக்களிடம் நம்மை வெகு சீக்கிரம் கொண்டு சேர்க்கும் என்கிறார் தேவந்தி. சமீபத்தில் மிஸர்ஸ் இந்தியா இன்டர்நேஷனல் 2019 விருதையும் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

பெரிய திரையாக இருந்தாலும் சின்ன திரையாக இருந்தாலும் அது விளம்பரப் படமாக இருந்தாலும் அதில் நான் தனிக் கொடி நாட்ட வேண்டும் என்பது என் ஆசை என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *