சிறுகதை

நூலக நண்பன் – பாலகிருஷ்ணன்

Makkal Kural Official

ஆறுமுகம் – அவன் குடியிருக்கும் தெருவில் பழைய பேப்பர் இரும்பு சாமான்கள் வாங்கும் ஒரு சின்னக் கடையை வைத்து பிழைப்பு நடத்துபவன்.

அந்தத்தெருவில் குடியிருப்பவர்கள் வீட்டில் சேரும் பழைய இரும்பு சாமான்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பழைய பாட்டில்கள் பேப்பர் போன்றவற்றை ஆறுமுகம் கடைக்குக் கொண்டு வந்து அதை எடைபோட்டு விற்று காசு வாங்கிச் செல்வார்கள்.

ஆறுமுகமும் தெருக்காரர்கள் கொண்டு வரும் பழைய பொருட்களை வாங்கி அதை மொத்தமாக சேர்த்து வைத்து வேனில் ஏற்றி குடோனுக்கு கொண்டு சென்று விற்று நல்ல வருமானம் பார்ப்பான்.

அவன் பழைய இரும்பு சாமான் கடையில் தேவையில்லாத பொருட்கள் வீட்டில் அடைசலாக இருக்கும். பொருட்கள் தெருவில் குடியிருப்பவர்கள் கொண்டு வந்தால் அவற்றில்?

பெரும்பாலும் பழைய தினசரி பேப்பர்களும் வார இதழ்களும் பள்ளி மற்றும் கல்லூரி பழைய புத்தகங்களும் கடையில்இருந்து கொண்டு வருவார்கள்.

ஆறுமுகம் அவற்றை மட்டும் உடனடியாக குடோனுக்கு அனுப்ப மாட்டான்; அவைகளை மட்டும் தனியாக சேர்த்து வைப்பான்.

மற்ற பொருட்களை மொத்தமாக சேர்ந்தவுடன் குடோனுக்கு அனுப்பி விடுவான்.

ஆறுமுகம் கடையில் அவனது மனைவி ஆராயியும் சேர்ந்து அவனுக்கு உதவியாக இருப்பாள்.

மக்கள் கொண்டு வரும் பொருட்களை இரகம் வாரியாக பிரித்து வைப்பது அவைகளை எடை மிசினில் போட்டு கணக்குப் பார்ப்பது போன்ற வேலைகள் செய்வாள்.

வேலைக்கு வெளியிலிருந்து சம்பளத்திற்கு ஆள் வைக்காமல் கணவனும் மனைவியும் சேர்ந்து வேலை பார்ப்பார்கள்.

இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டு.அவர்கள் அவர்களாகவே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.

ஆறுமுகமும் அவன் மனைவியும் கடையை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்!!

வாடகைக் கடை என்பதால் வாடகையை ஒழுங்காக கட்டி விடுவார்கள்.

ஆறுமுகம் பள்ளிக் கூட படிப்பு கூட சரியாக படிக்கவில்லை ஐந்தாம் வகுப்புக்கு மேல்

அவனால் படிக்க முடியவில்லை..

ஆனால், ஆறுமுகம் தன்னால் பள்ளியில் கூட படிக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தப் பட்டிருக்கிறான். என்ன செய்வது தமக்கு அப்படி ஒரு சூழ்நிலை என மனதை தேற்றி விட்டான்.

தற்போது அவன் பழைய இரும்பு சாமான்கள் பேப்பர் கடையில் இருந்தாலும் இன்னும் படிப்பின் மீது அவ்வப் போது ஆர்வம் வந்து கொண்டிருக்கும்!!!

இப்போது வந்து என்ன பயன் காலம் கடந்து விட்டது!

பிள்ளைகளை யாவது நன்றாக படிக்க வைக்க வேண்டுமே என்று நினைத்திடுவான் ஆறுமுகம்!!

இருந்த போதிலும் அவன் கடையில் வரும் பழைய நாளிதழ்கள், வார இதழ்கள் பள்ளிக்கல்லூரி புத்தகங்களை தனியாக எடுத்து வைத்து கடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றை ஆர்வமாக படிப்பான்..

இவற்றை படிப்பதற்காகவே குடோனுக்கு அனுப்பாமல் சிலவற்றை ஒதுக்கி வைத்திருப்பான்!

ஒருமுறை ஆறுமுகம் மனைவி ஆராயி ஏய்யா நம்மக்கடையில இரும்பு சாமான், பிளாஸ்டிக் சாமான், பழைய பாட்டில் உடனுக்குடனே விக்க வேனில ஏத்தி குடோனுக்கு அனுப்புறே. ஆனா பேப்பரு புத்தககத்த மட்டும் சீக்கிரமா அனுப்பாம நம்ம கடையில வச்சிருக்க ஏய்யா என்றுக் கேட்டால்??

அதற்கு ஆறுமுகம் ஆராயி அதை நான் பொழுது போறதுக்கு படிக்கறதுக்கு வச்சி இருக்கேன் என்றான்..

நீ பொழுது போக்குறதுக்கு நம்மக்கடை பேப்பர் தான் கிடைச்சிசா பேசாம லைப்ரேரிக்கு போயி படிக்கலா முல்ல. பொழப்ப நடத்த வந்தீயா புத்தகம் படிக்க வந்தியா? என்றுக்கேட்டாள்..

அதற்கு ஆறுமுகம், அடியே நான் எல்லா பேப்பர் புத்தகத்தையா படிக்க முடியும். எதோ என்னால படிக்கிற பேப்பர் புத்தகத்தை மட்டும் படிக்கப்போறேன். மத்ததை விக்கத்தானே செய்றேன் என்று பதில் சொன்னான்

அதற்கு ஆராயி நீ பழைய பேப்பர் புத்தகத்தை படிச்சி என்ன அறிவாளியா ஆகப்போறியா ?.

நான் அதுக்கு படிக்கல; அதுக்கெல்லாம் நான் படிக்குறகாலத்திலேயே படிக்கல; இப்ப படிச்சி என்ன ஆகப்போகுது சும்மா நாட்டுநடப்பு பொதுவான விசியமும் தெரிஞ்சிக்கிறதுக்குத் தான் படிக்கிறேன் என்றான்

நீ வித்தியாசமா இருக்கிற. கடையப் போட்டோமா நாலுகாச பாத்தோமா அப்பிடின்னு இல்லஇருக்கணும்.

இப்ப பாருநம்மக் கடையில எவ்வளவு பேப்பர் புத்தகம் குவிஞ்சி இருக்கு பேசாம இதைபுத்தக கடையில் வித்தாலும் நல்ல காசு வரும் என்றாள் ஆராயி

இந்த பேப்பர் புத்தகமெல்லாம் விக்க தானே போறோம்.

இதை நாளைக்கே காலி பண்ணுயா வேன் வண்டி வந்த உடனே எல்லா பேப்பர் புத்தகத்தை ஏத்தி அனுப்பு இடமாவது சுத்தமாகட்டும் என்று ஆராயி வற்புறுத்திக் கேட்க ஆறுமுகமும் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்து விட்டான்

என்ன செய்வது ஆறுமுகம் ஆசையாக ஆர்வமாக படித்த பேப்பர் புத்தகங்கள் பொழுது போக்கவும் நாட்டு நடப்புகளையும் பொது அறிவை வளர்க்கவும் நல்லது கெட்டது தெரிந்து கொள்ளவும்

குப்பையில் கிடந்த குன்றிமணி போலவும் காணக் கிடைக்காத அற்புத புதையலாகவும் தம்மை செதுக்கிய சிற்ப களஞ்சியமாக தமக்குக் கூடவே இருந்து நல்ல ஒளி காட்டியாக நல்ல வழிகாட்டியாக இருந்த புத்தக நண்பர்களை மனைவி இவைகளை காலி செய்ய சொல்கிறாளே அல்ல அழிக்க சொல்கிறாளா ?.

அவள் சொல்வதில் தவறில்லை. நான் படிக்காததே என் தவறு. அவள் இதைக் குப்பையாக பார்க்கிறாள். ஆனால் நான் அவற்றை அறிவு நூல்களைப் போல் அல்லவா பார்க்கிறேன்

பள்ளியில் படிக்கும் போது இந்த ஆர்வம் எனக்கு வரவில்லை; இந்த வயதில் எனக்கு ஏன் படிப்பின் மீது வெளிவந்தது.

பழைய இரும்புச் சாமான்கள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மீது எனக்கு நாட்டமில்லையே ஏன்.

மதுபானக் கடையில் வேலை பார்த்தால் குடித்துதான் ஆகவேண்டும் என்று சட்டமா?.

பழைய இரும்புக் கடையில் இருந்தால் துருபிடித்த இரும்பாகத்தான் இருக்க வேண்டுமா?

கீழே உள்ளவர்கள் மேல்நிலைக்கு வரக்கூடாதா?.

சிறுவயதில் வராத படிப்பின் வாசம் ஏன் இப்போது எனக்கு வந்தது என்று ஆறுமுகம் தனக்குத்தானே மனதில் ஆயிரம் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டுக்கொண்டான்.

மறுநாள் காலை கடையில் பழைய பேப்பர் இரும்பு சாமான்களை எடுத்து செல்வதற்கு வேன் வந்திருந்தது

ஆறுமுகமும் ஆராயியும் சேர்ந்து வேனில் ஏற்றப்பட வேண்டிய பொருட்களை எடுக்க முதலில் பழைய பேப்பர் வார இதழ் மற்றும் புத்தகங்களை தனித்தனியாக ஆறுமுகம் பிரித்து வைத்துக்கொண்டிருந்தான். அவனுடைய மனம் மிகவும் கலங்கிப் போனது

ஒரு நூலகமே தன்னை விட்டு பிரிந்து போவது போலிருந்தது. இவ்வளவு நாட்களாக

தனக்கு அறிவுச் சுவையூட்டி பழைய புத்தகங்கள் இன்று காணாத இடத்திற்கு செல்லபோகிறதே என்று நண்பர்களைப் பிரிந்து போவது போலானான்.

தொழிலையும் பார்க்க வேண்டிய துள்ளது. குடும்பத்தையும் பார்க்கவேண்டிய துள்ளது. இதிலிருந்து நாம் விலக முடியாது என்று அவன் உணராமலில்லை.

ஆறுமுகம் ஒவ்வொரு பொருளாக வேனில் ஏற்றும் வேளையில் ஆராயியும் கடையில் உள்ள சாமான்களை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு பாட்டில் மூடியில்லாமல் சாய்ந்து தனியாக கிடக்க அதிலிருந்து திரவம் ஒழுகியபடி இருந்தது

இதை ஆராயி பார்த்தவுடன் படக்கென்று மூடிகழன்ற பாட்டிலை கையில் எடுக்கும் போது ஆறுமுகம் பார்த்து விட்டான்

உடனே அவன் ஆராயியை பார்த்து அந்த பாட்டில எடுக்காதே ஆராயி என்றுக் கத்தியபடி லேசாக தள்ளி விட்டான் அவளை.

ஆராயி என்னமோ ஏதோ என்று அதிர்ச்சியடைந்து நின்றாள்,

நீ இந்த பாட்டில தொட்டிருந்தே உன் கையெல்லாம் வெந்து போயிருக்கும் என்று சொல்லவும்.

மறுபடியும் ஒன்றும் புரியாமல் விழித்தாள். இதை கவனித்த ஆறுமுகம் கீழே கிடந்த பாட்டிலைக்காட்டி இது என்ன பாட்டில்னு உனக்குத் தெரியுமா? இந்த பாட்டில என்ன எழுதி இருக்குதுன்னு உனக்குத் தெரியுமா?

உனக்குத்தான் படிக்கத்தெரியாதே. ஆசிட்டுன்னு இங்கிலீஷ்ல எழுதியிருக்கு நானும் கொஞ்சம் படிச்சதுனால எனக்கு தெரியல

எல்லாம் நம்ம கடையில் வர்ற புத்தகங்கள வச்சி ஓரளவு இங்கிலீஷ் கத்துகிட்டேன்; இப்ப அது பயன் பட்டிருக்கு பாத்தியா

படிப்பு அது எப்பவும் நமக்கு கைக்கொடுக்கும் ;அது அறிவை வளர்த்துவிடும்.

அது தெரியாத விசியத்தை சொல்லி கொடுக்கும்.

நம்பிக்கையோட வாழலாம்; நான் சின்ன வயசுல படிக்கல. நீயும்படிக்கல அதுனால இந்த தொழிலுக்கு வந்தோம்

படிச்சிருந்தா நல்ல வேலைக்குப் போகலாம்; படிக்காதனால தான் இப்படி கஷ்டபடுறோம்.

நம்ம பிள்ளைகளாவது நல்ல படிக்கவைப்போம்; ஒவ்வொரு புத்தகமும் ஒரு பொக்கிசம் போலத்தான்.

படிப்புக்கு வயசே கிடையாது, ஆர்வம் இருந்தா யாரும் எந்த வயசுலையும் படிக்கலாம்.

படிப்பு நமக்கு சோறு போடும், ஆறிவு கொடுக்கும். அதனால நீயும் படிச்சிருந்தா ஆசிட்ன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். நீ படிக்காதனால ஆசிட்டுன்னு இங்கிலீஷ்ல எழுதி இருந்ததை தெரியல,

அதனால இந்த வயசுல நீ பள்ளிக்கூடத்துல படிக்க முடியாது. பேப்பர் நியூஸை பார்க்குறதுக்காவது படிக்கணும்.

நல்லது கெட்டது தேரிஞசுக்கலாம். இன்னொரு முக்கியமான விசியத்தை சொல்றேன் கவனமாக் கேளு,

நம்மக்கடையில பழைய பேப்பர் பழைய வார புத்தகத்துல நல்ல புத்தகங்கள எடுத்து அதை எல்லோரும் படிக்கிற விதமான ஒரு சின்ன நூலகம் ஆரம்பிச்சா படிச்சவங்க படிக்காத வங்க அத்தனை பேரும் படிச்சி பலனடையட்டும் இதுல நாமும் படிக்கலாம்;

நம்ம கடை பக்கத்துலேயே நூலகத்தை ஆரம்பிக்கலாம்; என்ன சொல்லுற ஆராயி என்று ஆறுமுகம் கேட்க

ஆராயி உடனே ஆரம்பிக்கலாம் என்று முகம் மலர சொன்னாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *