சென்னை, டிச 20–
தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 2024–-2025–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதிய நிலை குறித்தும் சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் (பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையம்) அமைப்பது தொடர்பாகவும், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் சுரங்க பாதைகளை அழகுபடுத்துதல் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னர் சேகர்பாபு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சாதனைகள் அடங்கிய ‘‘காபி டேபிள்’’ புத்தகத்தை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் எஸ்.ருத்ரமூர்த்தி, அ.பாலசுப்ரமணியன், ந.ரவிக்குமார், கண்காணிப்பு பொறியாளர் நா.பாலமுருகன், முதுநிலை திட்ட அமைப்பாளர் அனுஷியா, செயற்பொறியாளர் விஜயகுமாரி, சென்னை மாவட்ட நூலக அலுவலர் கவிதா, திட்ட ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.