நல்வாழ்வுச் சிந்தனைகள்
கருப்பட்டி செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்கிறது. இது செரிமானத்திற்கு தேவைப்படும் நொதிகளை செயல்படுத்துவதை துரிதப் படுத்துகிறது. மேலும் குடல் பாதைகளை சுத்தப்படுத்துவதில் உதவுகிறது.
கருப்பட்டி சுவாசப் பாதை, குடல், உணவுக் குழாய், நுரையீரல் மற்றும் வயிறு ஆகிய உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. .
கருப்பட்டியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளைப் போக்க உதவுகிறது. இது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் குடல் இயக்கத்தை தூண்டுகிறது.
கருப்பட்டியில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளதால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது எலும்புகளை பலப்படுத்துவதால் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு தொடர்புடைய பிரச்சனைகளை குறைக்கிறது.