வாழ்வியல்

நீரிழிவு நோயைத் தடுக்கும் புரோட்டீன்!

நீரிழிவு நோயை தடுக்க நாம் நிறைய மாற்றங்கள் செய்தாலும்

போதுமான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயை தடுக்கிறது என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது . இதுபற்றிய விபரம் வருமாறு :–

புரதப் பற்றாக்குறை இருப்பவர்களுக்கே இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. எனவே டயாபெட்டீஸ் நோயை தடுக்க நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவு நோய் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. நாம் வாழ்க்கை முறையில் பின்பற்றும் சில ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் தான் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்.

நமக்கு ஏற்படும் புரத குறைப்பாட்டிற்கும் நீரிழிவு நோய்க்கும் நிறையத் தொடர்பு உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நீரிழிவு நோய் குறிப்பாக உலகளவில் இந்தியர்களை பாதித்து வருகிறது.

இந்த நீரிழிவு நோய் பாதிப்பில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு வரை இந்தியாவில் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மற்ற ஆய்வுகள் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் 134 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே நீரிழிவு நோய் வராமல் பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *