வாழ்வியல்

நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் என்றால் என்ன?

இந்தியாவில் நாள்தோறும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது.

ஏன் உலகெங்கிலும் பெருகிக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய்களுடைய நோயாளிகளின் பெருக்கமும் ஏற்படுகிறது. நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் என்றால் என்ன?

தொடர்ந்து இடைவிடாது அதிக அளவில் இரத்தத்தில் நிற்கும் சர்க்கரையின் அளவு சிறுநீரகங்களின் மிக மெல்லிய சன்னமான இரத்தக் குழாய்களை பழுதடையச் செய்கின்றன. இது நீண்டநாள் தொடரும் நீரிழிவு நோயின் குணமாகும்.

இதனால் உயர்இரத்த அழுத்தம், வீக்கங்கள், மற்றும் சிறுநீரகத்தின் மீது தாக்கங்கள் போன்றவை ஏற்படுகின்றன. இறுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் தாக்கம் மிக மோசமாக சிறுநீரகங்களை பாதித்து விடுகிறது. நீரிழிவு நோயினால் வரும் இந்த சிறுநீரகப் பிரச்னைக்குத்தான் End stage kidney disease என்ற பெயர் சூட்டப்படுகிறது.

மருத்துவ உலகில் இதற்கு diabetic Nephropathy என்று பெயர். மேற்கண்ட நோயைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவம் என்ன?

நீரிழிவு நோய் உலகம் முழுவதுமே நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த நோய் ஒன்றே மிக மோசமாக சிறுநீரகங்கள் பாதிப்பு அடையக்கூடிய நிலையை தோற்றுவிக்கிறது.

தீவிரமான சிறுநீரக பாதிப்பினால் அவதியுறும் 40 லிருந்து 45 சதவீத நோயாளிகள் எல்லோருமே நிரிழிவு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களே.

இப்படி நோய், முடிவு-நிலையை-நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவு மிக அதிகம்.

வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவைப் போன்ற நாடுகளில் இந்த அதிகமான செலவைத் தாங்கி கொள்பவர்கள் மிகக்குறைவு. விரைவிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நீரிழிவுடன் கூடிய சிறுநீரக பாதிப்புக்களை தடுக்க முடியும்.

முறையான சிகிச்சையும் தொடர்ந்து இடைவிடாது மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளும் டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்தும் நாளை தள்ளிப் போடும். இந்நோயுடன் கூடிய இருதயக் கோளாறு உள்ளவர்கள் விரைவில் இறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது.

ஆகவே விரைவிலேயே இந்த நோயைக் கண்டறிவது மிக முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *