செய்திகள்

நீராவி இயந்திரம் ஏற்படுத்திய தொழிற்புரட்சி

பிரிட்டனின் தொழிற்புரட்சியின் சிறப்புத் தொழில்நுட்பங்களாக துணி உருவாக்கம், சுரங்கப்பணிகள், உலோகவியல் மற்றும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தப்பிறகு போக்குவரத்து என்பவை அமைந்தன.

அனைத்திற்கும் மேலாக இந்தப் புரட்சி மிக மலிவாக கிடைத்த நிலக்கரியால் விளைந்தது. வார்ப்பு இரும்புத் தொழில்நுட்பத்தால் பலவிதக் கட்டமைப்புகள் கட்டப்பட்டன.

இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட்டன. நீராவி இயந்திரத்தால் சுரங்கங்களிலிருந்து விரைவாக நிலக்கரியை வெளியேற்ற முடிந்ததால் மேலும் கூடுதலாக நிலக்கரி எடுக்க முடிந்தது.

உயரழுத்த நீராவி இயந்திரத்தால் போக்குவரத்துக்கு தொடர்வண்டிகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்துப் புரட்சி ஏற்பட்டது.

19வது நூற்றாண்டு ஸ்டீபன்சனின் பாதுகாக்கப்பட்ட ராக்கெட் ரெயில்

பத்தென்பதாவது நூற்றாண்டில் போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் தொடர்பியலில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இவை ஐரோப்பாவிலும் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்திலும் துவங்கின.

18ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்த நீராவிப் பொறி நீராவிப் படகுகளிலும் தொடர்வண்டிப் போக்குவரத்திலும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டது. 1830ஆம் ஆண்டில் முதல் தொடர்வண்டி தடம் மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையே கட்டமைக்கப்பட்டது.

இராபெர்ட் இசுடீபென்சன் உருவாக்கிய இராக்கெட் தொடர்வண்டிப்பொறி இந்தத் தடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்வண்டிப் போக்குவரத்திற்கு துணையாக தந்தியும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக மேம்பட்டது.

வெள்ளொளிர்வு விளக்கு போன்ற பல தொழில்நுட்பங்கள் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டன. வெள்ளொளிர்வு விளக்கினால் தொழிற்சாலைகளில் இரண்டாவது மூன்றாவது முறைப்பணிகள் செயல்படுத்த முடிந்தது. பொறியாளர்களுக்குத் தேவையான பொறிக்கருவிகள் உற்பத்தி நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *