தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு
டெல்லி, செப். 16–
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி உயர்த்துவதற்கு தேவையான விரிவான ஆய்வு தரவுகள் தளம், கொலீஜியத்திடம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார்.
டெல்லியில் ராம்ஜெத்மலானி நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தீலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:–
தரவுகள் தளம்
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயர்த்துவதற்கு தேவையான உண்மைத் தரவுகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது தவறான தகவல் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசும்போது, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் பதவி உயர்வுக்கு தேவையான தரவுகளுக்காக, விரிவான ஆய்வு தளத்தை உச்ச நீதிமன்றம் தயாரித்துள்ளது. அதன்மூலம், நாடு முழுவதிலுமிருந்து முதல் நிலையிலிருக்கும் 50 நீதிபதிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கென செயல்திறன் அளவுகோள்களை வகுக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.