செய்திகள்

‘நீட்’ தேர்வு விலக்கு: இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர்

சென்னை, அக். 13–

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, ‘நீட்’ தேர்வு விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் சந்திக்க உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வு விலக்கு தொடர்பாக, சந்தித்து பேச உள்ளார். இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணியளவில், முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பேசுகிறார்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப் பேரவையில், நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு மசோதா ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *