செய்திகள்

நீங்கள் ‘வெர்ஜினா…?’: ஆன்லைனில் நடிகையை சீண்டிப் பார்த்த ரசிகர்

Spread the love

சென்னை, மார்ச் 26–

‘கொரோனா’ வைரஸ் எதிரொலியாக பொதுமக்களைப் போலவே நடிகர் நடிகைகளும், பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகள் தங்கள் ரசிகர்களை ஆன்லைன் மூலம் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்கள்.

களரி, ஜூலை காற்றில்… ஆகிய படங்களில் நடித்தவர் சம்யுக்தா மேனன் . இவர் இப்போது மலையாள சினிமாவில் பிரபலமாகி வருகிறார். ஆன்லைன் கலந்துரையாடலில் ஒரு ரசிகர், நீங்கள் கன்னித் தன்மை உள்ளவரா – அதாவது வெர்ஜினா…?’ என்று கிண்டலாக ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

தன்னை சீண்டும் விதத்தில் வந்த இந்தக் கேள்வியை கேட்டு சம்யுக்தா அதிர்ச்சியடையவில்லை. பதிலையும் தவிர்க்கவில்லை. கேட்ட வாலிபரையும் அந்தப் பதிவிலிருந்து அகற்றி விடாமல் தன் மனதில் பட்ட கருத்தை தைரியமாக வெளியிட்டார்.

‘‘வெர்ஜினிட்டி… (கன்னித்தன்மை), செக்ஸ், ஆல்கஹால் உள்ளிட்டவை பற்றி கேட்டால் பெண்கள் பயந்து விடுவார்கள் என நினைக்கிறீர்களா? அல்லது கேள்வி கேட்கும் நீங்கள் தனியாக தெரிவோம் என நினைக்கிறீர்களா? எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பொதுவாகவே நீங்கள் இப்படித்தான் யோசிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது புரிகிறதா..?’ என்று கன்னத்தில் அறைவது போல பதில் தந்திருக்கிறார்.

‘உங்களது போக்கு சரியானதும் இல்லை, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், யாரிடமாவது அடி வாங்கப் போகிறீர்கள்’’ என ஆத்திரத்தில் விளாசித் தள்ளினார் சம்யுக்தா.

இது பாராட்டத்தக்க பதிலா அல்லது மழுப்பல் பதிலா? அவரது சமூக வலைதளப் பக்கத்தில் குவியும் ‘லைக்கு’களும், ‘கமெண்ட்’ பகுதியில் வரும் விமர்சனங்களும் இன்றைக்கு ஆன்லைன் புரட்சிக்கு நல்ல உதாரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *