சினிமா செய்திகள்

நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமி மூவருக்கும் அடிச்சுது சான்ஸ் : ராதிகாவின் ‘சித்தி –2’ தொடரில் ஒப்பந்தம்

* பொன் வண்ணணுக்கு – நுரையீரல் தொற்று

* நிகிலா – கர்ப்பம் * ஷில்பா –காலில் காயம்

நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமி மூவருக்கும் அடிச்சுது சான்ஸ் :

ராதிகாவின் ‘சித்தி –2’ தொடரில் ஒப்பந்தம்

 

சென்னை, ஜூலை 22–

நடிகை ராதிகா சரத்குமாரின் ‘சித்தி –2’ டிவி தொடரில், ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த நடிகர்களுக்குப் பதில் புதிதாக 3 நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமி –மூவரும் தான் அந்த நடிகர்கள்.

ஏற்கனவே தொடரில் நடித்திருந்த பொன் வண்ணன் – இப்போது நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷூட்டிங்கிற்கு வரவழைத்து தேவையில்லாமல் அவருக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலமே முக்கியம் என்பதால் அவரை நடிக்க வைக்கவில்லை.

தொடர்ந்து நடிகை நிகிலா கர்ப்பமாக இருக்கிறார். 3–வது நடிகை ஷில்பா, காலில் காயம். வீட்டில் சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமியை ஒப்பந்தம் செய்திருக்கிறோம் என்று நடிகை ராதிகா சரத்குமார் தன் ட்விட்டரில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். புதிதாக நடிகர்கள் இப்போது மாற்றப்பட்டு இருப்பதால் ஒளிபரப்பு சற்று தாமதமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே போல ரெட்டை ரோஜா– தொடரில் ஷிவானிக்குப் பதிலாக சாந்தினி தமிழரசன் ஒப்பந்தமாகி உள்ளார். ‘கொரோனா’ தொற்று லாக்–டவுனுக்கு முன்னாலேயே ஷிவானி இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார்.

இதே போல திருமணம், உயிரே, ஓவியா– ஆகிய தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு சில நடிகர் – நடிகைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிப்பதால்… அவர்களுக்குப் பதிலாக வேறு நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

லாக்டவுன் விலக்கிக் கொண்ட போது, சின்னத்திரை படப்பிடிப்பு துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. நடிகர் – நடிகைகளுக்கு இடையில் இடைவெளியும் விடப்பட்டது. கிருமி நாசினி படப்பிடிப்பு தளம் முழுவதும் தெளிக்கப்பட்டது. நடிகர் – நடிகைகள் அவ்வப்போது ‘சானிட்டைசர்’ மூலம் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொண்டும் நடித்தனர். அதோடு போதிய பாதுகாப்போடு படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *