வாழ்வியல்

நில நடுக்கத்தைத் தாங்கும் கட்டிடங்கள்: கான்பூர் ஐஐடி தேசிய நில நடுக்க ஆய்வியல் மையம் புதிய ஆராய்ச்சி

டெல்லி மண்டலத்தில் ஏற்படும் நில நடுக்கங்களைக் கண்காணித்து நிலத்தடி கட்டமைப்புகளை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய நில நடுக்க ஆய்வு மையம் ஆராய்ந்து வருகிறது. தில்லியிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நில நடுக்க ஆதாரங்களை வகைப்படுத்த வேண்டும் எனவும் நில நடுக்கத்தை ஏற்படுத்தும் நிலத்தடி கட்டமைப்புகளின் குறைபாடுகளை வரையறை செய்ய வேண்டியது அவசியம் எனவும் உணரப்பட்டது.

பாறை அமைப்புகளில் உள்ள முறிவுதான் இந்த குறைபாடு.

இதற்காக குறைபாடுகள் உள்ள தில்லி சுற்றுவட்டாரப் பகுதியில் 11 தற்காலிக கூடுதல் நில நடுக்க ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த மையங்களில் இருந்து பெறப்படும் தரவுகள், இப்பகுதியில் ஏற்படும் சிறிய நில நடுக்கங்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. நில நடுக்க ஆய்வு மையங்கள் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் நில நடுக்க மையத்தின் துல்லியத்தைக் கண்டறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி மண்டலத்தில் மேக்னடோ-டெல்டூரிக் என்ற புவிஇயற்பியல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மேக்னடோ-டெல்டூரிக் என்பது ஒரு புவி இயற்பியல் முறையாகும், இது நிலத்தடி கட்டமைப்பையும், செயல்முறைகளையும் புரிந்துகொள்ள, பூமியின் காந்த, மின்னணு புலங்களின் இயற்கையான நேர மாறுபாட்டைப் பயன்படுத்துகிறது. இந்த அளவீடு பாறைகளில் குறைபாடுகள் உள்ள மகேந்திரகர்-டேராடூன், சோனா, மதுரா பகுதியில் நடத்தப்படுகிறது.

இந்த அளவீடுகள் நிலத்தடியில் திரவத்தின் இருப்பைக் கண்டறியும். இவைதான், நில நடுக்கம் ஏற்படும் சாத்தியங்களை அதிகரிக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு, டேராடூனில் உள்ள இமாலயன் புவியியல் வாடியா மையத்துடன் கூட்டு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு மற்றும் குறைபாடுகளை கண்டறிவதற்கான புவியியல் புல ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை நில அதிர்வு அபாயத்தை துல்லியமாக மதிப்பிடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தகவல்கள், நில நடுக்கத்தைத் தாங்கக் கூடிய கட்டிடங்களைக் கட்டவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பான ஆய்வை, ஐஐடி கான்பூருடன் இணைந்து தேசிய நில நடுக்க ஆய்வியல் மையம் மேற்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *