புதுவை, மார்ச் 21–
புதுச்சேரியில் மூடப்பட்டிருக்கும் அரசு சார்பு நிறுவனங்களை உடனடியாக திறந்து, நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாப்ஸ்கோ ஊழியர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரியில் நஷ்டம் காரணமாக பல அரசு சார்பு நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால் அரசு சார்பு நிறுவனங்களின் பணிபுரிந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ மற்றும் பிற அரசு நிறுவனங்களை உடனடியாக திறந்து வேலை வழங்க கோரியும், 65 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் கடலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.