சிறுகதை

நிலா சாட்சி | காசாங்காடு வீ காசிநாதன்

தான் செய்த கொலையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று அவன் நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் ஏழு வருடங்களுக்குப்பின் தூக்கு தண்டனை என தீர்ப்பு வந்தது.

ஆற்றில் பெண்ணின் சடலம்! கொலையா? “கணவரிடம் விசாரனை“ என்ற செய்தியை படித்த மித்ரனின் நண்பர்களுக்கு அதிர்ச்சி.

சென்ற வாரம்தானே கோப்பிக் கடையில் மித்ரன் காதில் விழும்படி அவனது மனைவி சாந்தாவும் ரகுவும் மோட்டார் சைக்கிளில் சுற்றுவதாக நாம் கதைத்தோம்.

சாந்தி இறந்த நேரத்தில் மித்திரனுக்கு நைட் ஷிப்ட் வேலை.

காயங்கள் ஏதும் இல்லை.

விஷம் உடலில் பரவி இருந்தது.

பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி பெண் தற்கொலை , கணவர் விடுவிப்பு, புலன் விசாரணை நிறுத்தம்….

திட்டமிட்டபடி எல்லாம் முடிந்தததில் மித்ரனுக்கு நிம்மதி.

அந்த பெளர்ணமி நிலவில் மித்ரனும் சாந்தியும் அவர்களது வீட்டின் பின்புற காலாங் ஆற்றின் பூங்காவிற்கு வந்தனர்.

“ நீ, ரகுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது உண்மையா? “

ஆமா! ஒரு முறை

அதுதான் பிரச்சனை!

ரகுவை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தது நீங்கள்தானே?

“ ஒரே வங்கி கிளையில் அவனும் கணக்கு வைத்துள்ளதால் நான் இந்தியா செல்லும் போது உனக்கு உதவ“

“வங்கிக்கு நேரமானதால் அவருடன் சென்றேன், வேறு எங்கும் செல்ல வில்லை“

“ நான் சில மாதம் ஊரில் இருந்திருந்தால் மாசமாயிருப்பே“

“தப்பா பேசாதீங்க’’

‘’ஊரே நம்மை பார்த்து சிரிக்குது’

‘’நாசமாப் போயிருவீங்க’’

நீ மோசம் போயிட்டு என்னை நாசமா போங்கிறே?

இப்ப என்ன செய்யனும்?

“இந்த பூச்சி மருந்தை நீ குடி,இல்லை நான் குடிச்சு சாகிறேன் “

அவள் யோசனையில்… மித்ரன் கையில் எடுத்து திறந்தான்.

சாந்தி அவனிடம் இருந்து புடுங்கி அதை முழுதும் குடித்துவிட்டாள்.

‘‘ வீண் பழி சுமத்துரே…கொன்று விடவும் துணிந்து விட்டாய்! நான் உண்மையானவள்! இந்த நிலா சாட்சி…. உன்னை தண்டிக்கும்’’.

சாந்தி ஆற்றில் குதித்துவிட்டாள்.

தூரத்தில் ஓனருடன் வாக்கிங் வந்த நாய் ஒன்று ஊளையிட்டது!

*****

தற்போது ஏழு வருடங்கள் ஓடிவிட்டன.

ஆற்று பூங்கா… மறக்க முடியுமா?

மித்ரன் அவனது புது மனைவி வினிதா, ஐந்து வயது மகனுடன் இங்கு வருவதுண்டு.

சாந்தியின் கடைசி வரிகள் காதில் எதிரொலியாய் ஒலிக்கும்.

அன்று பெளர்ணமி… மகனுடன் பூங்காவிற்கு வந்திருந்தான், நிலவை பார்த்து சிரித்தான்!

என்னப்பா நிலவை பார்த்து சிரிக்கிறீர்கள் ?

பெரியம்மா சாந்தி இறந்த போது நிலா சாட்சி சொல்லும் என்றாள்…. அதை நினச்சேன்…. சிரிச்சேன்…

எப்படி இறந்தாங்க?

நான்தான்…. வற்புறுத்தி பூச்சி மருந்தை குடிக்க சொல்லி சாகடிச்சேன்.

எல்லாம் உங்க அம்மாவுக்காக !

திருடன்! திருடன் !!

“கைப்பை“ என்ற சத்தம்!

நான்கு நாட்களுக்குப்பின் இரவு ஒரு மணிக்கு வீட்டு கதவு தட்டவும் மித்ரன் கதவை திறந்தான்.

வெளியில் போலீஸ் ….

பூங்காவில் நடந்த ஒரு திருட்டு பற்றி கண்காணிப்பு கேமிரா பதிவை பார்த்த போது அதில் உங்களின் குரல் உள்ளது.

அது பற்றி விசாரிக்க வேண்டும்.

திருட்டு எப்போது ?

இந்த பெளர்ணமி அன்று எட்டு மணிக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *