ஆர். முத்துக்குமார்
10 ஆண்டுகளுக்கு முன்பு நாசா விஞ்ஞானிகள் அப்பல்லோ 11 ராக்கெட்டில் ஆம்ஸ்டிராங்குடன் 3 ஆஸ்டிரோ நாட்டுகளை நிலவுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு பத்திரமாக தரையிறங்கினார்கள் அல்லவா? அதையும் மிஞ்சும் சாதனையை டிசம்பர் 11 அன்று செய்ய இருக்கிறார்கள்.
சமீபமாக நிலவுக்கு பயணிப்பதில் மீண்டும் ஆர்வத்தை கொண்டு வந்தது நமது இஸ்ரோ விஞ்ஞானிகளே! சந்திராயன் 1 வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. அது அக்டோபர் 2008–ல் நிலவை 3400 முறை சுற்றி வந்து, பல்வேறு கோணங்களில் விதவிதமாக படம் எடுத்தும் அனுப்பியது.
ஒரு ஆண்டிற்குப் பிறகு தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 2009–க்குப் பிறகு எந்த தகவலும் கிடையாது.
ஆனால் அது ஓர் வெற்றி சரித்திரமாகும், அது தந்த நம்பிக்கையால் மீண்டும் இரண்டாவது முறையாக சந்திரயான்–2, ஆகஸ்ட் 2019–ல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிலவின் வெளிவட்ட பாதையை படு லாவகமாகவே கடந்து நிலவில் தரையிறங்க தயாராகிவிட்ட நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு தொலைத்தொடர்புகள் துண்டித்து விட்டது. அதைத் தொடர்ந்து சரியான முறையில் தரையிறங்க முடியாது போனது.
ஆனால் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம் பல அரிய தகவல்களை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தந்து கொண்டே இருந்தது. அச்சமயத்தில் நிலவில் நீர் இருப்பதை கண்டனர். மேலும் நிலவு மண் பல்வேறு நவீன ஆராய்ச்சிகளுக்கு நல்ல செய்தியாக மாறியது.
இதைத்தொடர்ந்து சீனாவும் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பி சோதனைகளை துவங்கியது.
2019 ஜனவரி மாதத்தில் சீனா முதன்முறையாக ரோபோட்டுகள் இயக்கிய விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியது.
அடுத்த 10 ஆண்டுகளில் சீனா மேலும் நான்கு விண்கலங்களை நிலவுக்கு அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சென்ற மாதம் அமெரிக்க விஞ்ஞானிகள் ஓரியன் விண்கலத்தை நிலவை சுற்றும் பணியில் வெற்றி கண்டனர்.
மேலும் அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது, காரணம் இதுவே 4 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அப்பால் பயணிக்கும் விண்கலன் ஆகும்.
ஆர்ட்டெமிஸ் என்ற இந்த விண்கலன் பயணிகளையும் ஏற்றிச் செல்லும் வல்லமை கொண்டிருக்கிறது. ஆனால் இம்முறை பயணிகள் செல்லவில்லை. ஆனால் ஆர்ட்டெமிஸ் விண்ணில் ஏற்படக்கூடிய எந்த சிக்கலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகும்.
இம்முறையும் மிக சிக்கலான பயணத்தை நிலவில் மேற்கொண்ட வண்ணம் இருக்கிறது, அதாவது நிலவு சுழற்சிக்கு எதிர்மறையாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்ததாக சில மணி நேரத்தில் மீண்டும் மறுபுற சுழற்சிக்கு மாறி டிசம்பர் 11 பூமிக்கு திரும்ப பயணத்தை துவங்கிவிடும்.
நமது சந்திராயன் –3 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் பயணிக்க வைக்கிறார்கள், நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் நாசாவின் அனுபவத்தை புரிந்து கொண்டு நிலவில் மனிதனை தரையிறக்கி பிறகு பத்திரமாக பூமிக்கும் அழைத்து வந்து விடுவார்கள்.