செய்திகள்

நிலவுக்கு இதுவரை 38 முறை விண்கலத்தை அனுப்பிய நாடுகள்

சென்னை, ஜூலை 14–

இந்தியாவின் சந்திரயான்–3 திட்டத்திற்கு முன்பாக, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா சார்பாக 38 முறை நிலவுக்கு விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

1959- ஆம் ஆண்டு, அப்போதைய சோவியத் ரஷ்யா, முதல் முதலில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்திற்கு லூனார் 2 என பெயரிடப்பட்டது. இது கடினமாக தரையிறங்கிய விண்கலம் ஆகும். பின்னர் 1966- ஆம் ஆண்டு, நிலவுக்கு மீண்டும் ஒரு விண்கலத்தை அனுப்பியது. அதற்கு லூனார் 16 என பெயரிட்டது. லூனார் 16 விண்கலம் மென்மையாக தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷ்யா 23 முறை நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது. அதில் 7 முறை வெற்றிகரமாக நிலவை ஆய்வு செய்யும் பணி முடிக்கப்பட்டது.

மனிதர்களை இறக்கி அமெரிக்கா

ஆனால், 6 விண்வெளி திட்டங்கள் மூலம், 12 பேரை நிலவுக்கு அனுப்பிய ஒரே நாடு அமெரிக்கா மட்டும் தான். 1969 ஆம் ஆண்டு அப்போலோ 2 மூலம், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டரினை நிலவுக்கு அனுப்பியது. அப்போலோ திட்டங்கள் மூலம் 1969 முதல் 1972 ஆம் ஆண்டு வரை 6 முறை நிலவுக்கு அமெரிக்கர்கள் சென்றுள்ளனர். அதில் அப்போலோ 13 மட்டுமே தோல்வியடைந்தது.

சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் சேஞ்ச்–1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நிலவின் மிகத் துல்லியமான 3டி வரைபடத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கமாக இருந்தது. 2019- ஆம் டிசம்பரில், “யுடு” ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய மூன்றாவது நாடானது சீனா. மொத்தமாக, சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

தற்போது நிலவை ஆய்வு செய்யும் பணியில் இந்தியா நான்காவது நாடாக இணைந்துள்ளது. இந்தியா சந்திரயான் 1 திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. சந்திரயான் 2 திட்டம் பாதி வெற்றியடைந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படுகிறது. 38 முறைக்கு மேலாக நிலவை ஆய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், மொத்தம் 15 முறை மட்டுமே வெற்றிகரமாக நிலவில் லேண்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *