சென்னை ஐஐடி மாணவர் உருவாக்கி சாதனை
அறிவியல் அறிவோம்
சென்னை ஐஐடி மாணவர்கள் நிலவில் இறங்கிப் பரிசோதனை செய்வதற்கான ரோபோவைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்த பின்னர், பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம் என அதனை உருவாக்கிய மாணவர் தெரிவித்தார்.
அதேபோல் தற்போது அதிகரித்து வரும் விவசாயப் பணிக்கான ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் இயந்திரத்தினை பயன்படுத்தி நடவு செய்தல், விதை விதைத்தல், உரம் தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான கருவியையும் சென்சார் உதவியுடன் ஐஐடி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். தற்போது ஆரம்பக் கட்டத்தில் இதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.