செய்திகள்

நிலக்கரி சுரங்கம், கட்டுமான துறைக்கு 48 டன் சுமக்கும் ‘சிக்னா’ டிப்பர் லாரி: டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

சென்னை, ஆக.18–

நிலக்கரி மற்றும் கட்டுமானத் துறைகளின் சரக்குப் போக்குவரத்திற்கான சிக்னா 4825.டிகே என்னும் இந்தியாவின் முதல் 47.5 டன் மல்டி– ஆக்சில் டிப்பர் லாரியை

டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிப்பர் லாரி இது. டாடா மோட்டார்ஸின் மேம்பட்ட செயல்திறன், அதிக சரக்கு கொண்டு செல்லும் திறன், குறைவான செலவீனங்கள், அதிக சொகுசு மற்றும் ஓட்டுநர் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

ஹெவி டியூட்டி 9 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த டிப்பர் டிரக் 3 ரக டிரைவ் முறைகளை – லைட், மீடியம் மற்றும் ஹெவி என கொண்டுள்ளது, சுமை மற்றும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு, அதிக எரிபொருள் செயல்திறனை உறுதி செய்யும் வகையில், பொருத்தமான ஆற்றல் மற்றும் இழுவிசை தேர்வுகளை வழங்குகிறது. இது டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் கட்டப்பட்ட, பயன்படுத்த தயாராக உள்ள ஒரு 29 கன மீட்டர் டிப்பர் பாடி மற்றும் மற்றும் ஹைட்ராலிக்ஸ் கொண்ட வாகனமாக உள்ளது என்று ​​டாடா மோட்டார்ஸ், தயாரிப்புத் தொகுப்பு துணைத் தலைவர் டி.கே. வாசன் தெரிவித்தார்.

டாடா மோட்டார்ஸ் டிப்பர் லாரி 6 ஆண்டுகள் 6 லட்சம் கிலோமீட்டர் என்னும் மிகச்சிறந்த உத்தரவாதத்துடன் வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *