செய்திகள்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார் செந்தில்பாலாஜி

கரூர்,மே.16-
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி என கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி குற்றம்சாட்டினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி அரவக்குறிச்சி பேரூராட்சி 177-வது வார்டுக்கு உட்பட்ட பாரதிநகர், சின்னக்கவுண்டனூர், மேலத்தலையூர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நோில் சந்தித்து அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
எம்.ஜி.ஆரின் நோக்கங்களையும், அம்மாவின் லட்சியங்களையும் அவர்களின் வழியில் சிறப்பான முறையில் நிறைவேற்றி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு மக்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை கண்டு அச்சத்தின் உச்சத்திற்கு சென்று தலைமைப்பண்பு சிறிதுமின்றி தரமற்ற வார்த்தைகளால் அண்ணா தி.மு.க. அரசை விமர்சித்து வருவதுடன், எம்.ஜி.ஆர். உருவாக்கிய, அம்மா கட்டி காத்த மாபெரும் இயக்கமான அண்ணா தி.மு.க.வை சிதைக்க நினைக்கும் டி.டி.வி.தினகரனுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.
எதையும் சீர்தூக்கி பார்த்து தீர்ப்பு வழங்கும் பழக்கமுடைய அரவக்குறிச்சி தொகுதி மக்களாகிய நீங்கள் எம்.ஜி.ஆரும், அம்மாவும் தீயசக்தி என்று நமக்கெல்லாம் அடையாளம் காட்டிய தி.மு.க.வில் சேர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பச்சோந்தியான செந்தில்பாலாஜி, தான் வெற்றிபெற்றால் அரவக்குறிச்சி தொகுதி மக்கள் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 3 செண்ட் நிலம் கொடுப்பேன் என பொய்யான, நிறைவேற்றமுடியாத வாக்குறுதியை சொல்லி உங்களை ஏமாற்றி வருகிறார். உங்களை ஏமாற்றி வாக்குகளை பெற நினைக்கும் அவருக்கு இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் வழங்க வேண்டும்.
அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் குளிர்பதன கிடங்கு மற்றும் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைத்திடவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்திடவும், வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைத்துக்கொடுத்திடவும், அம்மா உணவகங்கள் அமைத்திடவும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். தன்குடும்ப நலனை தவிர தமிழக மக்களின் நலன் குறித்து சிறிதும் சிந்தித்துக்கூட பார்க்காத தி.மு.க.விற்கு இனி எக்காலத்திலும் வெற்றிக்கிடைக்கப்போவதில்லை என்பதனை உணர்த்தும் வகையில் இத்தேர்தல் அமைய அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு என்.ஆர்.சிவபதி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இலால்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.பாலன், தாத்தையங்கார் பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயம், முசிறி பேரூராட்சி கழக செயலாளர் எம்.கே.சுப்ரமணியன், தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி செயலாளர் பே.சுப்ரமணியன், மேட்டுப்பாளையம் பேரூராட்சி செயலாளர் கிட்டு (எ) கிருஷ்ணமூர்த்தி, தொட்டியம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.யோகநாதன், லால்குடி பேரூராட்கி முன்னாள் துணைத்தைலைவர் ஏ.டி.எல்.டோமினிக், பெரமங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் வ.தெ.கருப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *