சாவித்ரி, சோமசுந்தர் இவர்கள் நல்லமுறையில் குடும்பம் நடத்தி வந்தார்கள். அரசாங்க உத்யோகம். செட்டாக குடும்பம் நடத்தியதால் சுகமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். கரண், சரண், தேவிகா என்று பெயரிட்டனர். நல்ல பள்ளியில் படிக்க வைத்தார் சோமசுந்தர்.
கரண் நன்றாகப் படித்தான். என்ஜினியரிங்கை முடித்து விட்டான். சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து பணிபுரிந்து வந்தான்.
சரண் படிப்பு கரண் அளவு இல்லாவிட்டாலும் சோடை போகவில்லை. அத்துடன் விளையாட்டில் முதன்மையாகத் திகழ்ந்தான். அவனும் சென்னையிலேயே பணிபுரிந்தான்.
தேவிகாவும் நல்ல அழகுடன் திகழ்ந்தாள். பட்டதாரி ஆனவுடனேயே திவாகர் என்ற பையனுக்கு வரன் கேட்டு வந்தார்கள்.
திவாகர் வீடு ஒரு வசதியான குடும்பம். சோமசுந்தருக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. குறைவில்லாமல் திருமணத்தையும் நடத்தினார். ஆனாலும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆனாலும் குழந்தைப் பேறு மட்டும் கிட்டவில்லை. போகாத ஆஸ்பிட்டலுமில்லை. போகாத கோவிலும் இல்லை. குழந்தைப்பேறு மட்டும் அமையவில்லை.
திடீரென கரணுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வந்தது. வேலையும் ஏற்றுக் கொண்டான். சாவித்திரிக்கு பெருமை தாங்கவில்லை. கரணும் அமெரிக்கா சென்றுவிட்டான். நாட்கள் ஓடின. அவனுக்கு அவனுடன் வேலை பார்த்த அமெரிக்க பெண்ணான லிவியாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. லிவியா இந்திய பாரம்பரிய கொள்கைகள் மிகவும் பிடித்திருந்தது. அகில் என்ற பையனும் பிறந்து விட்டான்.
சாவித்திரி இன்னும் பழமை மாறாமல் இருப்பவள். அவளால் வெளிநாட்டுப் பெண்ணை ஏற்றுக் கொள்ள மனம் சம்மதிக்கவில்லை. ஆனால் மகன் கரண் மட்டும் அவளின் அன்பான குணத்தைப் புகழ்ந்து தள்ளினான். அமெரிக்கா வந்த 3 மாதம் தங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். கரண் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டே இருந்தான். கடைசியில் சாவித்திரியும் அங்கு வருகிறோம் என்று அரை மனதுடன் சம்மதித்தாள். சோமசுந்தர் காலத்திற்கேற்றால் போல் வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர். அவர் சந்தோஷமாக கிளம்பி விட்டார். ஆனால் சாவித்திரி மட்டும் வெறுப்புடன் கிளம்பினாள்.
லிவியா தன் மாமியார் வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தாள். தமிழ் நாட்டு சமையல் முறைகளையும் எப்படியோ கற்றுக் கொண்டாள். அகிலுக்கும் தமிழ் பேச கற்றுக் கொடுத்தாள். பாட்டி, தாத்தாவுடன் தமிழில் தான் பேச வேண்டும் என்று சொல்லி வைத்தாள்.
தன் மாமியார் தன் வீட்டிற்குள் வந்தவுடனே லிவியா ஆசையுடன் வீட்டை சுற்றிக் காட்டினாள். எப்படி நடந்து கொண்டாலும் சாவித்திரி முகத்தை கடுகடு என்று தான் பார்ப்பாள். பேசவே மாட்டாள். ஆனால் பேரன் அகில் மேல் அதீத பாசம் கொண்டாள். அவனை அழைத்துக் கொண்டு பார்க்கெல்லாம் சுற்றிக் காட்டுவாள்.
சரண் அம்மா சென்னையில் இருந்தபோது, அவளிடம் சொன்னான், நான் அண்ணா செய்தது போல் நடந்துகொள்ள மாட்டேன். நான் அம்மா, ‘நீ விரும்பிய பெண்ணைத்தான் மணந்து கொள்வேன் பெண் பார்த்தல் ‘லக்ன பத்திரிகை’ போன்ற எல்லா சம்பிரதாயங்களுடன் உன் மனம் குளிர நடந்து கொள்வேன் என்று சரண் அன்புடன் கூறினான்.
ஒரு மாதத்திலேயே சாவித்திரி திரும்பவும் சென்னை வந்து விட்டாள். தீவிரமாக சரணுக்கு பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்து விட்டாள். கடைசியில் ஒரு பெண்ணும் அமைந்தது. கல்யாண தேதியும் முடிவானது.
கரணுக்கும் உடனேயே முடிவான செய்தியை போனில் சொன்னாள் சாவித்திரி.
சரி அம்மா என்று சொன்னான். சாவித்திரி மட்டும் ஒரு கண்டிஷன் போட்டாள். லிவியாவை அழைத்து வரக்கூடாது. வேண்டுமானால் அகிலை மட்டும் அழைத்து வரலாம் என்று பிடிவாதமாகச் சொன்னாள். அமெரிக்கப் பெண்ணை அழைத்து வந்தால் நமக்கு அவமானமாகப் போய்விடும் என்றாள்.
கரண், தன் மனைவி லிவியாவிடம் நடந்ததைச் சொன்னான். லிவியாவும் மனதிற்குள் வருந்தினாலும் சரி நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்று சந்தோஷத்துடன் சொன்னாள். கரணுக்கு மட்டும் தெரியும் எவ்வளவு ஆசைப் பட்டாள் நம் கல்யாண முறைகளைப் பார்க்க. தானும் பட்டுப்புடவைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரத்தி சுற்ற வேண்டும். நலங்குப் பாட்டுப்பாட வேண்டும் என்று கனவுகள் கண்டாள் என்று. தன் அம்மா இப்படி கண்டிஷன் சொல்லவும் நாம் 2 பேருமே போக வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டான். ஆனாலும் லிவியா கரணை மட்டும் போக வற்புறுத்தினாள். கரண் மறுத்து விட்டான் தனியாக செல்ல.
கல்யாணம் நல்ல முறையில் முடிந்ததுகரண் இல்லாமலேயே. ஒரு நாள் தேவிகா வீட்டிற்கு வந்தாள் அம்மா தன் கணவர் மனோஷ் குமாருக்கும் அமெரிக்காவில் அவர் கம்பெனியிலிருந்து 2 ஆண்டுகள் அங்கே இருக்க வேண்டுமானம் என்றாள். சரி போய் வா சந்தோஷமாக என்று வாழ்த்தினாள்.
தேவிகாவும் கணவன் மனோஜ்வுடன் கிளம்பினாள். மனோஜ் மட்டும் தன் அம்மாவிடம் சொன்னான். அங்கே குழந்தைப் பேறுக்கான மருத்துவமும் அங்கே முன்னேறி உள்ளது. அதையும் பரிசோதனை செய்துவிடலாம் என்று தான் போறேன். எப்படியும் தேவிகா ஒரு குழந்தையுடனே தான் வருவேன்னு முடிவு செய்துள்ளாள்.
திடீரென ஒரு நாள் தேவிகா தான் கருவுற்ற செய்தியை அம்மாவிடம் சொன்னாள். அவளின் பூரிப்பைக் காண கண்கோடி தேவை. அங்கே என்ன சாப்பிடுவாயோ, நான் உனக்கு வேண்டுமானதை செய்து தருகிறேன். வளைகாப்பெல்லாம் இங்கேயே நடத்த வேண்டும் என்று சாவித்திரி சொன்னாள்.
ஆனால் தேவிகா, சென்னைக்கு வந்தால் குழந்தையோடு தான் வருவேன். இங்கே நல்ல மருத்துவ வசதி இருக்கிறது. கவலைப்பட வேண்டாம் என்று அம்மாவிடம் கூறிவிட்டாள். 10 மாதம் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நான் இங்கு 3 மாதம் கழித்து வருகிறேன். குாந்தைக்கும் வாக்சினேஷனெல்லாம் முடிந்துவிடும் என்று சொல்லி விட்டாள்.
சொன்னதுபோல் குழந்தை நிகிலுடன் வந்து இறங்கினாள். அம்மா, அப்பா, மாமனார், மாமியார் இவர்களுடன் சந்தோஷமாக குழந்தைக்கு தொட்டில் பெயர் சூட்டல் என்று தடபுடலாக கொண்டாடினார்கள். குழந்தைக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டை போடுவது தான் பாக்கி.
ஆனாலும் சாவித்திரி தன் மருமகள் லிவியாவை கரித்துக்கொட்டிக் கொண்டு தான் இருந்தாள். அவள் எனக்கு மருமகளே இல்லை என்று வெறுப்புடன் சொன்னாள்.
இதைக் கண்டு கொதித்து விட்டாள் தேவிகா. இப்படியெல்லாம் பேசாதீர்கள் அம்மா. அவள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். நடந்ததை இனிமேல் சொல்ல வேண்டியது என் கடமை அம்மா என்று கூறினாள்.
நான் அமெரிக்காவில் பெரிய டாக்டரிடம் எல்லாம் காட்டி விட்டேன். ஒரு குழந்தையை உன் கர்ப்பப்பைக்கு வலு இல்லை. உனக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்று எல்லா டாக்டர்களும் கூறி விட்டார்கள்.
அண்ணி தான் தன் வயிற்றில் வளரும் தன் இன்னொரு குழந்தையை எனக்கு தர முடிவு செய்தார்கள். என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. 5 மாதம் முடிந்ததும் வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டியதாக உள்ளது என்று கூறிவிட்டு தன் சினேகிதி வீட்டில் தங்கி இருக்கிறார்கள். ஒரு நாள் திடீரென எனக்குப் போன் வந்தது. ஒரு பெரிய ஆஸ்பிடலிலிருந்து. நானும் அண்ணிக்கு ஏதோ நடந்து விட்டது என்று போனேன். லிவியா எங்கே என்றேன். அண்ணியின் ரூமில் அண்ணி என்னை கூப்பிட்டார்கள். கண்ணை முடிக்கொண்டு இருந்தார்கள். நான் என்று அறிந்த உடன் என் கையில் ஒரு ஆண் குழந்தைத் தந்து விட்டு ‘இதோ நீயும் தாயாகி விட்டாய்’ என்று என்னை ஆச்சரிய பட வைத்தார். அவளல்லவோ பெண் தெய்வம்.
மேலும் சரணும் ஒரு பெண்ணைக் காதலித்தான். லிவியா அண்ணி தான் முன்னின்று இந்த திருமணம் நடக்க உதவினார்கள். நீங்கள் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள் என்று தான் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.
ஒரு நாள் அண்ணி லிவியா தன் அம்மா 2வது அப்பாவுடன் வந்தபோது அண்ணியைப் பார்த்து அப்படியெல்லாம் இகழ்த்தாதீர்கள். இப்படித்தானே நீயும் ஒரு நாள் என் மகனைவிட்டுப் பிரிந்து போவாய் என்று திட்டினீர்கள். அண்ணி மட்டுமே இதெல்லாம் தாங்கிக் கொண்டார்.
சாவித்திரி மனம் நெகிழ்ந்தாள். வெளிநாட்டுப் பெண் என்றாலும் அவள் நிறைகுடம் மட்டுமல்ல. பொற்குடம் ஆகும் என்று மனமார ஆசீர்வதித்தாள்.