நியூயார்க், டிச. 10–
நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சுஷ்மிதா சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லா (வயது 54) என்ற பெண் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்க சுஷ்மிதாவுக்கு, நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் குழு, சுஷ்மிதா சுக்லாவின் நியமனத்தை அங்கீகரித்துள்ளனர். இவர் 2023 மார்ச் மாதம் வரையில் இந்த பதவியில் இருப்பார் என்றும் ஆளுநர்கள் குழு தெரிவித்துள்ளது.
வாய்ப்புக்கு பெருமை
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற சுஷ்மிதா சுக்லா, மும்பை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணி வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுஷ்மிதா சுக்லா, நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.