செய்திகள்

நியூசிலாந்து–நியூயார்க் இடையே விமானப் போக்குவரத்து திட்டம்

வெலிங்டன், மார்ச் 24–

நியூசிலாந்து – அமெரிக்கா இடையிலான நேரடி விமான சேவையை, வரும் செப்டம்பரில், ‘ஏர் நியூசிலாந்து’ நிறுவனம் துவங்க உள்ளது.

17 மணிநேர பயண நேரம் உடைய, உலகின் நீண்ட விமான சேவைகளில் ஒன்றாக நியூசிலாந்து–நியூயார்க் விமான பயணம் இருக்கும். கடந்த 2020ல், நியூசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் இடையே, நேரடி விமான சேவையை துவங்க, ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் முடிவு செய்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நியூசிலாந்து முடிவு

கொரோனா பரவலை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நியூசிலாந்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளதால், மே முதல், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அனுமதிக்க, நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆக்லாந்து – நியூயார்க் இடையிலான விமான சேவையை இந்த ஆண்டு துவங்க, ஏர் நியூசிலாந்து நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரேக் போரன் கூறும்போது, ஆக்லாந்து மற்றும் நியூயார்க் இடையே, வரும் செப்டம்பர் முதல், நேரடி விமான சேவையை துவங்க முடிவு செய்துள்ளோம். இதன் பயண நேரம், 17 மணி நேரமாகும். இது, உலகின் மிக நீண்ட விமான சேவைகளில் ஒன்றாக இருக்கும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.