போஸ்டர் செய்தி

மசூதியில் மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டு 40 பேர் பலி

கிரிஸ்ட்சர்ச், மார்ச். 15–

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் இன்று நண்பகலில் மர்ம ஆசாமிகள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். 15 நிமிடம் படபடவென துப்பாக்கியால் சுட்டார்கள். அதிக பட்சம் 40 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் நடத்தியவர்களில் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள். இதில் ஒருவர் பெண். துப்பாக்கியால் சுட்டவர்களில் ஒருவன் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவன்.

இந்த துப்பாக்கிச் சூடு நடந்த மசூதிக்கு தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் அணியினர் செல்ல முயன்றபோது, இந்தத் தாக்குதல் நடந்தது. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள்.

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், நண்பகல் தொழுகை நடந்தது. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.

கண்மூடித்தனமாக சுட்டனர்

அப்போது, திடீரென நுழைந்த மர்ம ஆசாமிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். பலர் தரையில் படுத்துக்கொண்டனர். ஆனால், துப்பாக்கிச் சூடு 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்டத் தகவல் தெரிவித்தது. ஆனால், மிகப்பெரிய தாக்குதலாக இருக்கிறது என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். அதிகபட்சம் 40 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ”துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தபோது என் மனைவி குண்டு காயம் பட்டு தரையில் விழுந்தார், குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் என்மீது உடல்களை போட்டுக்கொண்டு தப்பித்தேன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராணுவ உடை அணிந்திருந்தார். மசூதியில் எங்கு பார்த்தாலும் ரத்தமாக இருந்தது” எனத் தெரிவித்தார். ‘என்னைச் சுற்றிலும் சடலங்கள் கிடந்தன. 4 பேர் தரையில் படுத்து உயிர் தப்பினார்கள். விட்டு பார்த்தாலும் சம்பல் இடத்தில் ரத்தக் கறை…’ என்று இன்னொருவர் பதட்டத்தோடு கூறினார்.

ராணுவ வீரர்கள் உடை போல ஒரு தோற்றத்தில் அந்த மர்ம ஆசாமிகள் உடை அணிந்திருந்தார்கள் என்று ஒரு தகவலை கூறியது.

* * *

பள்ளியிலும் துப்பாக்கிச் சூடு

கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள பாபனு மேல்நிலைப் பள்ளியிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்ட் சர்ச் நகரில் பதற்றமான சூழல் நிலவுவதால், பள்ளி, கல்லூரிகளை மூடி யாரையும் வெளியே அனுப்ப வேண்டாம் என்றும் பள்ளி சென்ற குழந்தைகளை அழைத்து வர பெற்றோர்கள் வெளியேற வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “இந்த பதற்றமான சூழலை சமாளிக்க முடியும், ஆனால், பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எத்தனை இடங்களில் இதுபோன்று துப்பாக்கிச் சூடு நடக்கிறது எனத் தெரியவில்லை. கிறிஸ்ட் சர்ச் நகரில் கடைகள்,வணிக வளாகங்கள், நூலகம் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

பள்ளி நுழைவாசல் இழுத்து மூடப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

அல்நூர் மசூதியிலும், வின்உட் மசூதியிலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இவ்விரு பகுதிகளிலும் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்காக யாரும் மசூதிக்கு வரவேண்டாம், நாங்கள் சொல்லும் வரை வீடுகளில் தங்கியிருங்கள், வெளியே வரவேண்டாம்’ என்று மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இருண்ட நாடுகள் பிரதமர் வேதனை

இந்தத் தாக்குதல் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜாசிண்டா அர்டெர்ன் ஆழ்ந்த வருத்தம் – அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். நாட்டின் இருண்ட நாங்களே என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ள அவர், இதுவரை நடந்திராத மோசமான ஒரு வன்முறைத் தாக்குதல் இது, இந்த வன்முறை வெறியாளர்களுக்கு நியூசிலாந்தில் இடமில்லை என்று அவர் எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *