வெலிங்டன், ஜன.25–
நியூசிலாந்து நாட்டின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி ஏற்றார். இவர், அடுத்த 9 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். பின்னர் பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘என் வாழ்க்கையில் என் கண் முன்னே இருக்கும் மிக முக்கிய பொறுப்பு, சவால், மிகமிகப்பெரிய கடமை இந்தப் புதிய பிரதமர் பதவி தான்…’ என்று கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்தார்.
துணை பிரதமராக கார்மெல் செபுலோனி பதவி ஏற்றார். பசிபிக் தீவு பாரம்பரியத்தில் வரும் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.
கொரோனா காலத்தில் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆற்றிய பணி மறக்க முடியாது.
இதுவரை நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதவியேற்ற பிறகு விழாவில் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், ” இது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு. எதிர்வரும் சவால்களை ஏற்க நான் உற்சாகமாகவும் இருக்கிறேன் ” என்றார்.