செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள் எடப்பாடி சூறாவளி பிரச்சாரம்

சென்னை, மார்ச் 23

நாளை முதல் 26ந் தேதி வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3 நாட்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.

இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

6.4.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 24.3.2021 முதல் 26.3.2021 வரை மூன்றாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

24 ந்தேதி -(புதன் கிழமை)

24 ந்தேதி அன்று காலை 7.30 மணி அளவில் சேலத்திலிருந்து கரூர் செல்கிறார்.

9 மணிக்கு கரூர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பேசுகிறார்.

10.30 மணிக்கு பரமத்தி (அரவக்குறிச்சி தொகுதி) கே.அண்ணாமலை (பா.ஜ.க.)

11.30 மணிக்கு வேடசந்தூர் டாக்டர் விபிபி. பரமசிவம்

12.30 மணிக்கு ஒட்டன்சத்திரம் என்.பி. நடராஜ்

3 மணிக்கு பழனி கே.ரவிமனோகரன்

5 மணிக்கு செம்பட்டி (நிலக்கோட்டை தொகுதி) எஸ்.தேன்மொழி, ஆத்தூர் ம.திலகபாமா (பா.ம.க.)

6.30 மணிக் திண்டுக்கல் திண்டுக்கல் சி. சீனிவாசன்

7.30 மணிக்கு நத்தம் நத்தம் இரா. விசுவநாதன்

25 ந்தேதி (வியாழக்கிழமை)

25 ந்தேதி காலை 9 மணிக்கு ஒத்தக்கடையில் மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர். கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் பேசுகிறார்.

10 மணிக்கு மேலூர் பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்

11 மணிக்கு அலங்காநல்லூர் (சோழவந்தான் தொகுதி) கே. மாணிக்கம்

12 மணிக்கு செக்கானூரணி (திருமங்கலம் தொகுதி) ஆர்.பி.உதயகுமார்

பகல் 1 மணிக்கு உசிலம்பட்டி பி. அய்யப்பன்

3 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.வி. ராஜன் செல்லப்பா

4.30 மணிக்கு ஜெயம் தியேட்டர் (மதுரை மேற்கு தொகுதி) செல்லூர் கே.ராஜூ

5.30 மணிக்கு ஆரப்பாளையம் (மதுரை மத்தியம்) ஜோதிமுத்துராமலிங்க தேவர் ( பசும்பொன் தேசிய கழகம் )

6 மணிக்கு முனிச்சாலை (மதுரை தெற்கு தொகுதி) எஸ்.எஸ்.சரவணன் 8.30 காரைக்குடி எச்.ராஜா (பா.ஜ.க.)

26 ந்தேதி (வெள்ளிக் கிழமை)

காலை 9 மணிக்கு காரைக்குடி வழியாக திருப்பத்தூர் சென்று, 9.30 மணிக்கு திருப்பத்தூர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து முதலமைச்சர் பேசுகிறார்.

10.15 மணிக்கு சிவகங்கை பி.ஆர்.செந்தில்நாதன்

11 மணிக்கு மானாமதுரை எஸ். நாகராஜன்

12 மணிக்கு அருப்புக்கோட்டை வைகைச்செல்வன்

3 மணிக்கு விருதுநகர் ஜி.பாண்டுரங்கன் (பா.ஜ.க.)

4.30 மணிக்கு சிவகாசி லட்சுமி கணேசன்

5.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் இ.எம். மான்ராஜ்

6.30 மணிக்கு ராஜபாளையம் கே.டி.ராஜேந்திரபாலாஜி

8 மணிக்கு சாத்தூர் ஆர்.கே.ரவிச்சந்திரன்

9 மணிக்கு கயத்தாறு (கோவில்பட்டி தொகுதி) கடம்பூர் சி. ராஜூ

இவ்வாறு தலைமைக் கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *