செய்திகள்

நாளை சிட்லபாக்கம் ராசேந்திரன் மகன் திருமணம்: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

காஞ்சீபுரம், பிப்.21-

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் மகன் திருமணம் நாளை காலை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்துகின்றனர்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் மகன் இரா.அஷ்வின் பி.ஷண்முகப்பிரியா ஆகியோரின் திருமணம் நாளை காலை சென்னை திருவான்மியூர், ஸ்ரீ இராமச்சந்திரா கண்வென்சன் சென்டரில் நடை பெறுகிறது.

இதில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், வாரிய தலைவர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், தொழிலதிபர்கள், நகர பிரமுகர்கள், மற்றும் சான்றோர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்து கின்றனர்.

திருமணத்தினையொட்டி, மண்ட பத்தில் கொடி தோரணங்கள் கட்டப் பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டு திருவிழா கோலம் பூண்டுள்ளது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், அவரது துணைவியார் ருக்மணி ராசேந்திரன் ஆகியோர் திருமணத்திற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *